Pages

Friday, 22 July 2016

குற்றாலக் குறவஞ்சி நூல் Kutralakkuravanji work

குற்றாலக் குறவஞ்சி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய நூல். 
  • இவர் வடகரை நிலப்பகுதியை ஆண்ட சினனஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவர். 
  • மதுரை மன்னர் விஜயரங்க சொக்கலிங்க நாயக்கர் இந்த நூலைப் பாராட்டி நிலக்கொடை வழங்கினார். அந்த இடம் இப்போது “குறவஞ்சி மேடு” என்னும் பெயருடன் திகழ்கிறது. 
  • திருவாடுதுறை ஆதீனம், சைவசித்தாந்த விளக்கு, சுப்பிரமணிய தேசிகர், மதுரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் இந்தத் திரிகூட ராசப்பக் கவிராயரின் மரபில் வந்தவர்கள். 
  • இதனைப் பலர் அச்சேற்றியுள்ளனர். அவற்றுள் கே எஸ் கற்பக விநாயகம் பிள்ளை, குற்றாலக் கோயில் பதிப்பும் சிறப்பானவை. அருணாதயம் பதிப்பக உரிமையாளர் அருணன் வெளியீட்டில் மூன்று பதிப்புகள் உள்ளன. நான்காம் பதிப்பு அருணன் தந்த உரிமையோடு பாரி செல்லப்பன் முயற்சியில் பாரி நிலைய வெளியீடாக அச்சேறியுள்ளது. முதல் பதிப்பு 1960, இரண்டாம் பதிப்பு 2013 (செய்தி – உரையாசிரியர் புலியூர் கேசிகன் முன்னுரை)

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்டுத் திருச்சியில் இருந்து அரசாண்டவர் விஜயரங்க சொக்கலிங்க நாயக்கர்.
  • இது இசைப்பாடல்களுடன் கூடிய நாடகத் தமிழ்நூல்.



No comments:

Post a Comment