![]() |
| சாமி ஊர்வலத்தின்போது சூடம் எரியும் ஆரத்தி |
கரி (யானை), நரி, நாகம்
(பாம்பு) வாகனங்களில் சாமி உலா வருகையில் கற்றவர்கள் சூழ்ந்து வந்து தொழுவர்.
எரியும் தீப்பந்தங்கள் எரியும். சூடத்தில் எரி வைத்து ஆரத்தி காட்டுவர். – இது செய்தி
(யானை இருந்தாலும்
ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி) யானை ஒன்று பொன்னை
மிகுவிக்கும். அந்தப் பொன் பையில் ஏறும். பொன் பையுடன் கற்றவர் சூழ்ந்து தொழுவர்.
எரி ஒன்று சென்று உலாவும் மேகத்தில் ஏறும். அது மின்னும். மின்னல் தாக்கி மலை
தீப்பற்றி எரியும். எரிந்து கிடக்கும் உயிரினத்தை உண்ண நலி ஒன்று தன் காலை எரியில்
ஊன்றி நடந்துவரும். – இது ஒருவகை நிகழ்வு.
பாடல்
கரியொன்று பொன்மிகும்பை யேறக்கற்றவர் சூழ்ந்துதொழ
எரியொன்று சென்றுலாத் தினிலேற விருண்டமஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினிலேறித் தொடர்ந்துவர
நரியொன்று சொந்தக்கன லேறிவந்தது நங்களத்தே .(152)
கரி ஒன்று பொன் மிகும் பையேறக் கற்றவர் சூழ்ந்து தொழ எரி ஒன்று சென்று உலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு சொரிகின்ற நாகம் மின் சோற்றினில் ஏறித் தொடர்ந்து வர நரி ஒன்று சொந்தக் கனல் ஏறி வந்தது நம் களத்தே.
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment