தென்னை மரத்தை ஒக்கும் சோலைகளைக் கொண்டது கமலை
என்று போற்றப்படும் திருவாரூர். கமலை வாழ் சிவன் செந்நிறச் சடைமுடியைக் கொண்டவன்.
அந்தச் செந்நிறம் எரியும் தீ போல இருக்கும். சடைமுடி எரியும் தீயில் காயும் பொன்
போல் இருக்கும். கொன்றை மரம் பூத்திருப்பது போல இருக்கும். பொன்னொளி விசும்
மின்னல் போல் இருக்கும். பொன்னணி செய்யும் பொற்கொல்லன் போல கங்கை அங்கே இருக்கும்.
பொன்னணி போல வெண்பிறை நிலாவும் அங்கு இருக்கும்.
பாடல்
தென்னொக்குஞ் சோலைக்கமலைப் பிரான்செஞ் சடாடவிதான்
என்னொக்கு மென்னிலெரி யொக்குமந்த வெரியிலிட்ட
பொன்னொக்குங் கொன்றைகரி யொக்கும்வண்டு நற்பொற்பணிசெய்
மின்னொக்குங் கங்கைகிழக் கொல்லனொக்கு மவ்வெண்பிறையே .(151)
தென் ஒக்கும் சோலைக் கமலைப் பிரான் செம் சடை அடவி தான் என் ஒக்கு மென்னில் எரி ஒக்கும் அந்த எரியில் இட்ட பொன் ஒக்கும் கொன்றை கரி ஒக்கும் வண்டு நல் பொன் பணி செய் மின் ஒக்கும் கங்கை கிழக் கொல்லன் ஒக்கு அவ் வெண் பிறையே .
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment