Pages

Wednesday, 13 July 2016

நற்றிணை Natrinai 161

தோள் வலிமையில்
யாப்புப் பெற்றிருக்கும்
புதல்வன்
அரசன் தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். பாறைகளில் உள்ள நீர்ச்சுனையில் நீல மலர்கள் மலர்ந்துள்ளன. காடெங்கும் வேங்கை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. தேன் உண்ணும் பறவை இனம் இம் என்னும் ஒலியுடன் பூக்களில் பொதிந்து கிடக்கின்றன. போரிட்ட இளைஞர் நெடுந்தெரு போன்ற நேர்வழியைப் பின்பற்றிக் குதிரை மேல்  செல்கின்றனர். குதிரைக் குளம்புகள் வளைந்த இதழ்களை உடைய காந்தள் பூக்களின் கொடிகளை அறுத்துத் தள்ளுகின்றன.
இங்கே இந்த நிலைமை.
அங்கே இல்லத்தில் என் தேன்மொழியாள் இருக்கிறாள். என் புதல்வன், அவள் தோளைக் கட்டிப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பான். (அப்பா எங்கே எனக் கேட்பான்) அவள் பறவைகளை காட்டி அவனை ஏமாற்றிக்கொண்டு இருப்பாளோ? அவள் தெளிவான காம உணர்வை வெளிப்படுத்தும் நல்லழகு மிக்கவள். மடிப்பு விழுந்த அல்குல் (இடுப்பு) கொண்டவள். – தலைவன் தன் தேர்ப்பாகனிடம் இப்படிச் சொல்லித் தேரை விரைந்து செலுத்துமாறு அறிவுறுத்துகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – முல்லை

இறையும் அருந் தொழில் முடித்தென பொறைய
கண் போல் நீலம் சுனைதொறும் மலர
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயின கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம்
மொழியாட்கே

வினை முற்றிப் பெயரும் தலைவன் தேர்ப்பாகன் கேட்ப சொல்லியது
பாடியவர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment