![]() |
| ஆயிரம் தலைப் பாம்பின் மேல் பள்ளிகொள்ளும் திருமால் |
மூன்று பக்கம் நீர் ஓடும் அரங்க நிலப் பகுதிப்
பெட்டகக் கோயிலில் (திருவானைக்கா) பொதிந்திருக்கும் மணியாகிய சிவனே! பாம்பு (பணம்) பங்கு
போட்டுக்கொண்டிருக்கும் ஆயிரம் தலைக்கு இடையில் தூங்கும் திருமால் என்னும் காளை
உனக்கு ஒன்று உண்டு (சிவனது நந்தி திருமால்
என் ஒரு கதை). தேவர்களும் முனிவர்களும் போற்றும் சொல்லுக்கு
அடங்காதவன் நீ. உனக்கு இந்த உலகம் அனைத்தும் ஈடாகுமா?
பாடல்
பாங்குபெறுந் திருவைந் நூற்றிரட்டிப் பணவிடையில்
தூங்குமதி லொருமாவேற்ற முண்டுசுரர் முனிவர்
ஆங்கவர் செப்பிற்கடங்கா துலகமனைத் தும்பெறுமா
ஓங்குமரங்கத் திருப்பெட்டகத்து ளொருமணியே .(147)
பாங்கு பெறும் திரு வைந் நூற்று இரட்டிப் பண இடையில் தூங்கும் அதில் ஒரு மாவேற்றம் உண்டு சுரர் முனிவர் ஆங்கு அவர் செப்பிற்கு அடங்காது உலகம் அனைத்தும் பெறுமா?
ஓங்கும் அரங்கத்துத் திருப் பெட்டகத்துள் ஒரு மணியே.
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment