![]() |
| கண்ணப்பன் சிவனை உதைக்கிறான் |
சிவபெருமான் திருவிளையாடல்கள் நகைச்சுவையாக இப்
பாடலில் கூறப்பட்டுள்ளன.
அருச்சுணன் வில்லால் அடிக்கவும்,
கண்ணப்பன் செருப்பால் உதைக்கவும்,
சாக்கிய நாயனார்
என்னும் ஒருவன் வெகுண்டு கல்லால் எறியவும்,
பிட்டுக்கு மண் சுமந்தபோது பாண்டியன் பிரம்பால் அடிக்கவும்,
இந்த
உலகில், இரவு போல் இருண்ட பொழில் சூழ்ந்திருக்கும் தில்லையில் உள்ள அம்பலவாணற்கு
ஓர் தாயோ தந்தையோ இல்லாத
தாழ்வுதானே காரணம்?
இப்படி அடியும் உதையும் படும்போது அரவணைக்க ஆருமில்லாதவன்
சிவபெருமான்.
பாடல்
வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லாலெறியப் பிரம்பாலடிக்க விக்காசினியில்
அல்லார்பொழிற் தில்லையம்பல வாணற்கோ ரன்னைபிதா
இல்லாததாழ் வல்லவோ விங்கனே யெளிதானதுவே .(146)
வில்லால் அடிக்கச் செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன் கல்லால்
எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில் அல் ஆர்
பொழில் தில்லை அம்பலவாணற்கு
ஓர் அன்னை பிதா இல்லாத தாழ்வு அல்லவோ இங்கனே யெளிது ஆனதுவே.
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment