![]() |
| அகத்தியர் பொதியமலை முனிவர் அகத்தியர் தமிழை மொண்டுகொண்டேன் என்கிறார் காளமேகப் புலவர் |
பிழை கழியும் பொருட்டு,
நல்ல நூலகக் கடலில் அறிவு நீரை அள்ளி உண்டு,
வழியும் நீர் பொதியமலையில்
அகத்தியராகக் காலூன்றியது.
அவர் தந்த தமிழில் வல்லமை மிக்க கவிதை மொழியும் புலவர் மனத்தில் இடித்து,
முழங்கி,
மின்னிக்
கவிதைமழை மொழியும்படிக்குக்
கவிஞனாய் காளமேகம் புறப்பட்டு
வந்திருக்கிறது.
பாடல்
கழியும்பிழை பொருட்டள்ளி நன்னூலங் கடலினுண்டு
வழியும்பொதி யவரையினிற் கால்கொண்டு வன்கவிதை
மொழியும்புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்
மொழியும்படிக்குக் கவிகாளமேகம் புறப்பட்டதே .(145)
கழியும் பிழை பொருட்டு அள்ளி நன்னூலம் கடலின் உண்டு வழியும் பொதிய வரையினிற் கால்கொண்டு வன் கவிதை மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கி மின்னிப் மொழியும்படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே .
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட
விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment