![]() |
| இராமன் |
சிவன்தான் தெய்வம். திருமாலையோ தெய்வம் என்று
பிதற்றுவது? சத்தம் முதலாகிய புலன்கள் ஐந்தையும் தாங்காத தெய்வம் தணிந்து
மறைந்துவிடும். கர்த்தா என்னும் செய்வம் அம்பலத்தே ஆடுகின்றது. அதனைக் கண்டு
இருபது கண் கொண்ட இராவணன் மைந்தன் இந்திரசித்து பொய்யான சீதையைக் கொல்லப் பார்த்து
இராமன் அழுது பித்தானான். அப்படி அழுது, பித்தானவனையோ தெய்வம் என்று பிதற்றுவது?
பாடல்
சத்தாதியைந்தையுந் தாங்காத தெய்வந்தணி மறையும்
கத்தாவெனுந் தெய்வமம் பலத்தேகண்டு கண்களிரு
பத்தானவன் மைந்தன்பொய்த் தேவியைக்கொல்லப் பார்த்தழுத
பித்தானவன் றனையோ தெய்வமாகப் பிதற்றுவதே .(148)
சத்து ஆதி ஐந்தையும் தாங்காத தெய்வம் தணி மறையும் கத்தா எனும் தெய்வம் அம்பலத்தே கண்டு கண்கள் இரு பத்து ஆனவன் மைந்தன் பொய்த் தேவியைக் கொல்லப் பார்த்து அழுத பித்தானவன் தனையோ தெய்வமாகப் பிதற்றுவதே.
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment