![]() |
| அலக்சாந்தர் ஈட்படிப்டை |
ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி
எழுபது.
காலம் 12 ஆம் நூற்றாண்டு.
ஈட்டி எழுபது பாடல்கள்
நாட்டிலுயர் செங்குந்த நாயகர்மீ திற்சிறந்த
ஈட்டி யெழுப தினைப்பாடக் – கோட்டில்
பருமா வரையதனிற் பாரத நூல்தீட்டும்
கரிமா முகன்கழலே காப்பு. 1
பூவார் புவனையிற் சோமன் றரும்பழி போனபின்பு
நாவாணர் போற்றிய நாடகங் கேட்ப நலமுடனே
யாவாணர் செங்குந்த ராயிரத் தெண்டலை கொய்திரத்தப்
பாவாடை யிட்ட துலகதெல் லாம்பகழ் பாலித்ததே.
2
பூதலம் வாழ்க குந்தர் பொலிவுடன் விளங்க நான்கு
வேதமெந் நாளு மோங்க வேதியர் பசுக்கள் பல்க
மாதவர் வளவன் செங்கோல் வளமை குன்றாது நிற்க
ஓதமே யறையும் பொன்னி யுறந்தையுஞ் சிறக்க
மாதோ. 3
கோட்கவி கொண்டு மாக்கள் கொடுந்தமிழ் கூறநீத்துத்
தாட்கவி புதிய வாட்டந் தலைக்கடை துரந்து
சாட
வாட்கவி கொண்ட மன்னன் வளவனு மகிழ நாமே
நாட்கவி பாடு நாட்போ லிருப்பது பெரிய நாடே.
4
விடங்கமே ழாதி வீதி வினங்கமா ரூர்வெண் காடும்
நடங்கொளுந் தில்லை மூதூர் பஞ்சநன் னதிசாய்க்
காடும்
இடங்கொள்மா காளமேழு மிடைமரு தூர்செங் காடும்
தொடங்கிய தரும வாட்சிச் செங்குந்தர் தொகுதிவாழி.
5
பாதநூபுரத்தில் தேவி சாயைகண் டமலன் கொண்ட
காதலால் கருப்பமாகுங் கதிர்நவ மணிமாதர்க்கண
மேதகு வீரத்தோடு மென்மீசை யோடும்வந்த
மாதவ வீரவாகுத் தலைவரித் தலைவர் மாதோ. 6
பிறந்தவொன் பதின்மர்குந்தப் பெருமையாம் பேசமாட்டோம்
பறத்தன கழுகும் பாறும் பயிரவி காளியஞ்ச
மறந்தகு மவுண ராட்ட மடங்கின மகிழ்ச்சியால்வாய்
திறந்தன வலகை மீட்டஞ் செய்யவாய்ச் சிறுவரோடே.
7
ஓதிய வேள்வியி னுவப்ப நாரதன்
போதவே தகர்தனைப் பொங்கு தீத்தர
வேதனைப் படுப்பதை விரைந்து கட்டியே
சேய்தனக் குதவின திருச்செங் குந்தமே. 8
பொதிய மால்வரைக் குறுமுனி தேறவும் பொருள்சொன்ன
மதியை யாறென வுடையவோர் மூவிரு வதனத்தான்
கதியை யாற்றியுங் குணத்தொடு பழகியுங் காணா
விதியை மேலவர் நடுங்கிடத் தளையிடு மிளிர்குந்தம்.
9
வனமுறு வாசமா வைகல் விட்டியா
சனமுற விண்ணிடத் தனிவை குந்தம்
இனனுறு பங்கய முவர்க் கெய்தவே
சினமுறு தாரகற் செறிசெங் குந்தமே. 10
பூட்டிய தேரொடும் பொலிந்த பானுவை
மீட்டிய தொட்டிலி னிறுக்கு மைந்தனை
மூட்டியசமரிடை முடித்து மாசறத்
தீட்டிய வீரர்கைச் சிறந்த குந்தமே. 11
பங்கமி லரிமுகப் பஃற லைக்கிளை
மங்கவே நூறியோர் வாகை மாலையை
எங்கள் வேற்படை தனக்கென்று சூட்டியொண்
செங்கடம் பணியுமால் செய்ய குந்தமே. 12
வனப்புறு மிளவலும் வரச்செவ் வேற்குகன்
கனப்பக பொறினில் கலாப மேறிய
யினப்புகழ் சேவலங் கொடிதனக் கேற்றுவெஞ்
சினப்புலி கொடிதரச் செறிசெங் குந்தமை.
13
குறையினைக் கடவுளர் கூறக் கேட்டவர்
துறையினை நிறுவியே சூர்த டிந்துநான்
மறையினை வழுவற வளர்த்துத் தேவர்தம்
சிறையினை மீட்டது திருச்செங் குந்தமே.
14
தாருவும் சுரபியுந் தவள வேழமும்
தாருடைப் புரவியுஞ் ச்சியுங் கைம்மிசைப்
போருடை வச்சிர வாளும் பொன்னகர்ச்
சீருறும் படியவுண் செறிசெங் குந்தமே. 15
முன்பகை யாவையு முடித்துக் கூரெயிற்
றன்பகை யாவையுந் தடிந்து சந்ததம்
பின்பகை யில்லதாப் பெற்றி செய்ததா
மொன்பதி னோர்கரத் தொளிருங் குந்தமே. 16
வெள்ளிமால் வரைசூல் காப்பு மிளிர்மணிச் சிகரக்காப்பும்
பள்ளிமால் வரையின் காப்பும் பைம்பொனா பரணக்காப்பும்
வள்ளிதாக் கைக்கொ ளென்று மகிழ்நீற்றுக் காப்புமிட்டுத்
தெள்ளிதா யுமையா டந்த செங்குந்தம் போலுமுண்டோ.
17
சலம்பிரி யாத சூட்டுச் சேவற்கே தனமெஞ் ஞான்றும்
வலம்பிரி யாத செவ்வேட் குறுதுணை யாகமன்னுட்
குலம்பெற வந்தா ரென்றங் கொடியுமை தந்த வீட்டி
நலம்பெறு மிந்தக் குந்தர் பரிசுமோ னாட்டி
லுண்டோ. 18
பருப்பத மேரகம் பரங்குன் றம்பழம்
பொருப்பத மாவினன்குடி செந்திற்பொது
விருப்பெனக் குன்றுதோ றாடலா மெனும்
திருப்பதி தனிலமர் செய்ய குந்தமே. 19
தேடுவார் வலமாய் வந்து தெரிசிப்பார் சென்னிமீது
சூடுவார் மலரே தூவித் தொழுதகை கூப்பி நிற்பார்
பாடுவார் காவென் றெம்மைப் பரிவினா னந்தமாக
ஆடுவார் குகன்கைச் செவ்வேற் கருள்துணைக்
குந்தமென்றே. 20
ஆலங் காட்டினி லரனுட னன்று வாதாடும்
கோலங் காட்டிய காளிதன் கொற்றம் போய்வெள்
பாலங் காட்டிய பன்மணித் தாளமே பறித்துச்
சீலங் காட்டிய குந்தர்நற் பெருமையார் தெரிப்பார்.
21
செங்களம் பொருந்திய திருந்த லாருர
வங்கமே மண்மிசை யாக்கி யாவியைச்
செங்கதிர் வழியிடைச் செலுத்தித் தேவர்க
டங்களை வான்புகத் தருஞ்செங் குந்தமே. 22
பரகதி வேள்விபண்ணு மிருடிதன் பான்மைபாரா
வரகதி தந்தை யேவு மமரரை மடிய நூறி
யிரதமோ டிவுளி வேழ மியாகதா னத்துக் கீந்து
சிரமணி மகுடம் பெற்ற செங்குந்தர் போலுமுண்டோ.
23
அம்பாழி மூழ்கியொரு கற்ப மெலாங்
கிடைக்கினுமென் னழலி னின்று
வெம்பாமே வெளிக்காலுண் டுட்காலை
வெளியில்விடா திருந்தா லென்னே.
வம்பாடு மிதழியணி வேணியனார்
வேதமலை வலம்வந் தீண்டுஞ்
சம்பாதிக் கமுதளிக்குஞ் சயக்குந்தம்
போல்வினவத் தாரா வன்றே. 24
உருக்கொடு பணியாதாரை யுளத்திலைந் தெழுத்தை
யுன்னிப்
பெருக்கொடு நின்று கண்ணீர்த் ததும்ப முன்னா
டாதாரைத்
தருக்கொடு நின்று கண்ணீர் ததும்ப முன்னா
டாதாரைத்
திருக்கோயில் வலம் வாராரைச் சினத்தொடு பொருஞ்செங்
குந்தம். 25
கூவிளை யிதழி தும்பை கொண்டருச் சித்தபேர்க்கும்
மூவர்தம் பாடலோதி முன்னின்று பணிந்த பேர்க்கும்
ஆவலோ டைந்தெழுத்தை யகத்துள்ளே நினைந்த பேர்க்கும்
தேவர்நா டாளவைக்குந் திருக்கை வேற்றுணைச்
செங்குந்தம். 26
ஆலமார் மிடற்றா ராடு மாடலே யாட லம்மை
ஏலவார் குழலா ளங்கைத் தாளமே தாளமேந்தும்
சூலமா குவதன் னான்கைச் சூலமே சூல மற்றிக்
கோலம்வாழ் வீரர் கையில் குந்தமே குந்தமாகும்.
27
ஆதிநா ளுமையவ னளித்த குந்தமே
சாதிநா லுவப்புடன் றலைக்கொள் குந்தமே
காதிமே லவரையுங் கல்லுங் குந்தமே
கோதினம் பாடவே கொள்ளுங் குந்தமே. 28
கருதலர் பொடிபடக் கருதுங் குந்தமே
விருதுடைச் சூர்முடி வெட்டுங் குந்தமே
பொருதனிப் புலிக்கொடி புனையுங் குந்தமே
தருதலத் தருவெனத் தருஞ்செங் குந்தமே. 29
கயிலைமால் வரையையும் காக்குங் குந்தமே
அயிலைநற் றுணையென வாக்குங் குந்தமே
வெயிலைமன் மணிகளின் மிளிருங் குந்தமே
மயிலைவா கனமென வாக்குங் குந்தமே. 30
இந்திர னயன்மா றேவர் யாவர்க்கு முதன்மையாக
வந்தபான் மையினாற் சூலமழுப்படை யத்தனார்க்கு
முந்திய நாமந் தானு முதலிய ராகை யாற்செங்
குந்தர்சந் ததிக்கு ம்பபேர் முதலிய ரென்றுகூறும்.
31
முந்தை நோன்பினான் குருக வேண்முசு
குந்த னுக்கொன்பான் குமர ரைத்தர
வந்த வீரரிவ் வகிலம் வென்றிசை
தந்த குந்தரித் தருசெங் குந்தமே. 32
விண்டு மார்பத் திடையிருத்தி வேலைக் கௌரி
பணிமாறப்
பண்டுபூசித் திடுங்காலை யாகண்டலன் போய்ப்
பாற்கடலின்
வண்டுழாய்மா யனைவணங்கி வானிற்பழிச்சும் தியாகரைமேற்
கொண்டு போந்து பாரின் முசுகுந்தற் குதவுஞ்
செங்குந்தம். 33
பிள்ளை யாருயிர்க் குறுந்துணை யாத்தனிப்
பேறெய்துங்
கிள்ளை யாரிவண் கொடுவரு கென்றுடலங் கீறிக்
கொள்ளை யாருயிரெரி நரகுறவடுங் கூற்றுயிர்
நனிசோர
வள்ளி யாவரு நடுங்கத் தந்திருமுகமே செலுத்துவொண்
குந்தம். 34
வடிவே லெடுத்த மனுதுங்க வளவன் தேவி வெதுப்பாற
முடிவேள் வயிற்செந் தீத்தருநாள் முளைமரங்
கனிக்கா குடநாட்டைச்
செடிவே ரறுத்தச் சிறையிட்டுச் சென்னி வியப்பத்
திறைபோலக்
கொடிவான் முரசு களிறுபரி யிரதங் கொடுக்குஞ்
செங்குந்தம். 35
ஆழநீள் கடற்கு மாங்கோ ரம்பிமேற் சென்றே யப்பாற்
சூழ்திருச் செந்தூ ருற்ற சுபனென்பான் றுணையாய்க்
கொண்டு
வாழிரா சாதிராச மன்னவன் மருவ லாற்றான்
ஈழநா டொருநா டன்னிற் றிறைகொண் டீன்டுற்ற
குந்தம். 36
மச்சநா டுடைய கோமேல் வங்கநா டாளு மன்னன்
குற்சா வரசற் காகச் சமரமேற்கொண்டு கொற்றக்
கைச்சலி யாமற் கொல்லுங் காலையில் கௌதனென்பான்
உச்சனி தொடங்கிப் போர்செய் குந்தம் போலுலகி
லுண்டோ. 37
இடைமரு தூரில் சாப மேந்திய சிறைக்கையானை
புடைதரு தடிமின் வீழப் பொருதியே புறங்கொடாது
விடைமழு வுடையான் பாதமென் கமலத்தில் சேர்த்த
படைமரு தன்கைக் குந்தம் போலினிப் பாரிலுண்டோ.
38
கூளிபா றின மிடங் கொண்டு சுற்றவே
காளிசா தாரெலாங் களத்தி லாடவே
வாளிதொட் டெழுமொரு வங்கக் கோவைமுன்
றோளிணை யாற்பொருந் துங்கைக் குந்தமே. 39
வானைவென் றுவரிசூழ்ந்த மண்ணை வென்றவுணரான
காளைவென் றமபுரிராசிக் கடலைவென் றருங்கலிங்கன்
சேனைவென் றலங்கல் மார்பஞ் செறியுமா மடங்கல்
வையக்
கோனைவென் றறியவாகைக் கொண்டென திரியுங் குந்தம்.
40
கலிகுறும் படுவள னுக்கும் காதுசூர்
பலிக்குறும் படுதனி வாகைக் குந்தர்க்கும்
பலிக்குநற் புகழெலாம் பாதி யாதலாற்
புலிக்கொடி மரபிரண் டினுக்கும் போந்ததால்.
41
தென்னவனைச் சேரனைச் சிறுமை சொல்லவும்
மன்னனை வளவனை மகிழ்ந்து பாடவும்
பன்னவிஞ் சாரதி படைக்க பான்மைபோல்
ஒன்னலர்க் குள்ளினத் துற்ற குந்தமே. 42
செல்வேறு புலிவே றாகுஞ் சேதுவி னளவாய்ச்
சென்னி
கொல்வே றில்லாம லோச்சிக் கன்னியே கொள்வ னென்றே
மால்வேறு சிவன்வே றென்ன வழுத்திடா வன்மை
போல
வேல்வேறு குந்தம்வே றென்றிரு பொருள் விளம்பார்
மேலோர். 43
பூமாலை கடப்பந் தாமம் பூண்மணித் தெரியல்
செய்ய
பாமாலை தன்னைக் கைக்கொள் முதலியர் பங்கதாக்கி
மாமாலை யொல்லார் காலில் வழிதுழிக் குடரின்
மாலை
தோமாலை யாகச் சூடுஞ் செங்குந்தம் போலுமுண்டோ.
44
பற்றினும் பற்றுஞ் சென்னி பறிக்கினும் பறிக்கும்
பாசம்
எற்றினும் எற்றுங் கூற்றை யீரினும் ஈரும்
வாரிச்
சுற்றினும் சுற்றும் அண்டம் துகளெழச் செயினும்
செயும்
மற்றினும் குந்தம் பொற்றா ருவப்ப ருளரோ மண்மேல்.
45
போற்றியா போற்றி யென்று புதுமலர் தூவிச்சீற்ற
மாற்றியே வந்தியாம லடையலர் வாழ்ந்திருந்தால்
காற்றென வூழ்த்தீயிற் கடலெனக் கொடிய கோபக்
கூற்றெனத் திரிந்து சோரிக் குளித்துடன் களிக்கும்குந்தம்.
46
சுட்டும் வீர வாகுவெனச் சொல்லும் பழுவூர்
வீரனமர்
முட்டுங் கால மூழி வெள்ள மூடுங் கால மாகாதோ
வேட்டங் காலில் வீழாதார் மேலுமுளரோ வீதியுலா
யீட்டுங் காலங் குந்தங் கண்டெழுமே கழுகு
பருந்துகளும். 47
இனிமா நிலத்திற் கண்டதில்லை கேட்டிருத்தலன்றிப்
பெரும்
பனியால் வரையு மைநாக முன்பின் படைதா னெடுத்தாலு
முனிமாறுண்டோ நடுநின்று முடிப்பான் கச்சித்தனியன்
வட்டத்
தனிமா நிழற்கீழ்ச் செங்குந்தஞ் சரணாகதிக்கு
வைகுந்தம். 48
உடலமண் மேலுயிர் விண்மோலால்லா ரொடுங்கவுதிரமொடு
குடருங் கொழுவுங் கழுகோடுங் கொள்ளை கொள்ளப்
பரிந்தூட்டு
மடல்வெண் டாழை முகமலர வாரிவாரித் திரைக்
கரத்தால்
கடல் வெண்டாளமே யெறியு மொற்றியூரன் கைக்குந்தம்.
49
தளர்ந்த வர்க்குத் திருவுருவம் தன்னை யடையார்க்
கொருசிங்கம்
இளந்தைய வர்க்குச் சிலை வேணல் இசையாற் பொற்பூ
தரமேயாம்
வளர்ந்த சாலி வரம்பினில் வால் வளைகண் முத்தந்
தரும் வளங்கூர்
களந்தை யாதி நகராசன் கைக்குந்தம் போற்கா
ணோமே. 50
கற்றிடங் கொண்டவர் கவின்சொற் கொள்ளுமே
உற்றிடங் கொண்டபேர்க் குலகை நல்குமே
வெற்றிடங் கொண்டமே வலரை வீட்டுமே
புற்றிடங் கொண்டவன் பொலிகைக் குந்தமே.
51
மூளா வடவைச் சிகரகிரி முடிகம் பிக்கு மாருதஞ்செந்
தாளான் மடங்கவொரு கூற்றந் தனிமும் மதிகாய்ச்
சிறுமூரல்
வேளாருயிரைப் போக்க வன்றஃகண்ணும் விளங்கு
முருத்திரனே
கோளாந்தக னொண்டோளான் கைக்குந்தம் வாகைக்
குந்தமே. 52
புண்ட ரீகமே குவளையே தவளமே பூமாவே
பிண்டி யேபெறும் சித்தசன் றன்குணம் பிழையாவென்
கண்ட வீரகண் டன்புலியூர்த்தனி காத்தேசீர்
கொண்ட பள்ளிகொண்டான் கரதலத்திடை கொள்ளுங்
குந்தம். 53
குணமார் தருமத் தெவ்வேந்தர் குலக்கோளரியே
குலத்தருவே
தணவா வன்மைச் சகம்பேசச் சகமே தாங்கும் பூதரமே
பிணவா வென்று பகராய்வாய் பிளந்து சோரிப்
பெரும்பூதக்
கணம்வாய் நிரப்புங் குந்தம்போல் காணோங் கேளோங்
கற்றோரே. 54
மிண்டிடா மண் மேவலீர் விளம்பிடாம லோருமின்
ஒண்டிடாமல் வாழ்வதெங்ஙன் சூரபன்மன் பட்டிடக்
கண்ட வீரவாகு தேவர் கால்வருங் குலத்துமன்
வண்டுலாவு கண்டியூரன் வயிரவாகு குந்தமே.
55
மூத்த முதுகுன்ற குரிசின் முதிரு மணவைப்
பாராளன்
பாத்த னென்னு மணியன் கைக்குந்தங் கொடுத்துப் பகரவே
பூத்தமார்பத் தார்பறித்துப் பூழிபடவே வீழ்ந்திறைஞ்சிக்
கோத்து செங்கை மலர்கூப்பிக் குறுகார் சிறுகிவரக்
கண்டான். 56
பஞ்சம் வேம்பத் தரும்பனையே தாவான் மிகவே
பாடாது
தஞ்சை வேம்பனைப் புகழ்ந்தே மதுமுன் செய்த
தவமேயாம்
எஞ்ச வெளிதோ வூழியுருத்திரன் கைக்கொளு மூவிலைவேலே
வஞ்ச மாயை அவதரித்த திவன் கைக்குந்த வரவாமால்.
57
வல்லான்றன் திருத்தேவி மங்கலியம் பிழையாமன்
மடிதா னேற்றிங்
கெல்லேரரு மங்கலியப் பிச்சையிடு மெனத்தாள்
வீழ்ந்திரப்ப வேண்டிக்
கொல்லாமல் விடுதல்புக ழெனக்கருதி யோகற்பின்
கொண்ட வாய்மை
நல்லார்க ளிருந்தவையின் புகழ்கைக்கோ காத்துகொல்
நஞ்செங் குந்தம். 58
எல்லாக்கா லத்தினுமொன் றேற்பவருக் கில்லையெனுஞ்
சொல்லானது கற்றுஞ் சொல்லறியா ரேந்து குந்தம்
வல்லானைக் கொல்லாமல் மனைவிக்கு மங்கலியம்
உல்லாசத் துடனளிக்கும் முதலியதொன் ற்றிந்தோமால்.
59
முத்தமி ழிராசரா சேந்திரன் முன்னமே
சுத்தவீ ரத்திற் துலங்கு தற்கொரு
பொய்த்தலை கொடுத்தலிற் புகழ்பெறாதென
மெய்த்தலை கொடுத்தன வீரக் குந்தமே. 60
பைந்தமிழ்க் காவலர் பகரும் பாடலார்
கந்தவே டான்மகிழ் கைலைக் காவலர்
வந்தவீ ரப்படைத் தலைவர் வந்துழிச்
சிந்தவே கழுத்துடற் செகுத்த குந்தமே. 61
தில்லைமூதூர் நடஞ்செய்யும் ஆலயத்
தொல்லையிற் பொறித்திடு முழுவை முத்திரை
எல்லையி னாவலொன் பதின்மர்க் காக்கியொர்
வல்லயிற் றுணையொடு மருவுங் குந்தமே. 62
எந்தையா மம்மை பாகத்திறைவனை வணங்கியாமே
பைந்தமிழ்ப் பரணி செய்த பாடலோ டந்தமாக
வந்தமா மடவா ராட அரியணை இருந்த வீரர்
குந்தமே குந்தம் வேறு குந்தமும் உளதோ கூற.
63
வரச்சிங் காதன வளவர் தம்பிரான்
தரச்சிங் காதனந் தன்னி லேறியே
துரைச்சிங் காதனந் தொழுங்க வீக்கிடும்
சிரச்சிங் காதனச் சீர்செங் குந்தமே. 64
வேட்டுமா னாடரி தாய வேணியர்
சூட்டூதாள் வாரிசத் துணைக ளேத்தியே
யாட்டுக சென்னியை யலர்த்தி யேயெனக்
காட்டுதற் கேயரி கவின்கைக் குந்தமே. 65
விண்டு வேதனு நாடரி தாகிய விமலன்
பண்டு தாருகப் பிரமகத்திப் பழிபோகக்
கொண்டு தாமெனக் கடுகியே குடிவழித் தொன்மை
கண்டு தாங்கழுத் தரிந்தது கவின்கவின் குந்தம்.
66
தவந்தனிச் செய்வதென் றலைச்சிங் காதனம்
உவந்தபா வாடையிட் டோடுஞ் சோரிமேல்
நவந்தனிற் பாடிய நங்க வித்திறஞ்
சிவந்திடச் செய்த்து திருச்செங் குந்தமே.
67
வீணுக்கே றாத வாய்மை விளம்பிடா வெற்றி யாளர்
ஆணுக்கே றாய்ப் பிறந்தோ ரடுபுலிப் பதாகை
மன்னர்
நாணுக்கே றாத சாப நாட்டிலே யிறுத்த மாறன்
மாணுக்கே றாத மாற்றா ரடைத்திட மருவுங் முந்தம்.
68
வட்டமா ரவையுழை வந்த மேலவர்
இட்ட பாவாடை கண்டிசை பெறாது மண்
முட்டவற் துயிர்பெறீஇ மொய்த்து ளேமெனக்
கட்டுள குந்தர்சீர் கழறி யேத்தினார். 69
செந்தமிழெக் காகபோந்து சிவந்தபா வாடையாக
நந்தமக் கிடுங் காலெந்த நகரமுமுளம் வியந்த
அந்தரத் தமரர் வாழ்த்தி அணிமலர் மாரிபெய்தார்
இந்தசெங் குந்தர் பெற்ற இசையெவர் பெற்றாரம்மா.
70
அம்பர்நாட் டமர்ந்த குந்த மயனரியரன் மூன்றென்னும்
உம்பர் தாமறிய வேண்டு முயர்ந்தமுத் தமிழினாலே
கும்பசம் பவனே தேர்ந்து கூறவே வேண்டு மல்லால்
இம்பர் யாங்கூற வேண்டுமெவர் மற்றுங் கூறுவாரே.
71
முற்றும்

No comments:
Post a Comment