Pages

Thursday, 21 July 2016

ஈட்டி எழுபது IttiElupatu 1

ஆனைமுகன்
நாட்டில் உயர்ந்தவர் செங்குந்த நாயகர். அவர்மீது சிறந்ததாக “ஈட்டி எழுபது” என்னும் நூலைப் பாடத், தன் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு, பருமாவரை எனப் போற்றப்படும் இமயமலையில் அமர்ந்துகொண்டு ‘பாரதம்’ என்னும் நூலை எழுதிக்கொண்டிருக்கும் ஆனைமுகன் தெய்வத்தின் திருவடிகள் எனக்குக் காப்பாக அமைய வேண்டும்.

காப்புப் பாடல்

நாட்டிலுயர் செங்குந்த நாயகர்மீ திற்சிறந்த
ஈட்டி யெழுப தினைப்பாடக் – கோட்டில்
பருமா வரையதனிற் பாரத நூல்தீட்டும்
கரிமா முகன்கழலே காப்பு. 1

நாட்டில் உயர் செங்குந்த நாயகர் மீதில் சிறந்த ஈட்டி எழுபதினைப் பாடக் கோட்டில் பருமாவரை அதனில் பாரத நூல் தீட்டும் கரிமாமுகன் கழலே காப்பு.

ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி எழுபது.
காலம் 12 ஆம் நூற்றாண்டு.  


No comments:

Post a Comment