![]() |
| திருப்புவனம் |
அழகு நிறைந்த ஊர் புவனை (திருப்புவனம்).
இந்த ஊரில் வாழ்ந்தவர் சோமன் (சோமாசி ஆண்டார்). அவர் செய்த பழியைச் செங்குந்தர் நீக்கினர்.
செங்குந்தர் 1008 பேர் தாமாக முன்வந்து தம் தலைகளைக் கொய்து பாவாடையில் வைத்துப் பழியைப்
போக்கினர். அதன் பின்னர், இந்த நூலைக் கேட்டனர். நாவாணராகிய புலவர் கேட்ட நாடகம் என்று
இந்த நூல் இங்குக் குறிப்பிடப்படுகிறது. நூலைக் கேட்ட பின்பு உலகம் சிறப்புற்று விளங்கியது
(பாலித்தது). இது நூலின் பெருமை கூறும் பாயிரம்
பாடல்
பூவார் புவனையிற் சோமன் றரும்பழி போனபின்பு
நாவாணர் போற்றிய நாடகங் கேட்ப நலமுடனே
யாவாணர் செங்குந்த ராயிரத் தெண்டலை கொய்திரத்தப்
பாவாடை யிட்ட துலகமெல் லாம்பகழ் பாலித்ததே.
2
பூ ஆர் புவனையில் சோமன் தரும் பழி போன பின்பு
நா வாணர் போற்றிய நாடகம் கேட்ப நலமுடனே யா வாணர் செங்குந்தர் ஆயிரத்து எண் தலை கொய்து
இரத்தப் பாவாடை இட்டது உலகம் எல்லாம் பகழ் பாலித்ததே.
ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி
எழுபது. யாப்பு எழுத்தகண்ணிக்கையில் அமைந்த கட்டளைக் கலித்துறை
காலம் 12 ஆம் நூற்றாண்டு.

No comments:
Post a Comment