Pages

Friday, 22 July 2016

ஈட்டி எழுபது IttiElupatu 3

பூதலம் வாழ்க.
ஈட்டி என்னும் செங்குந்தம் ஏந்திய செங்குந்தர் பொலிவுடன் விளங்க,
நான்கு வேதம் எந்நாளும் ஓங்க,
வேதியர் பசுக்கள் பல்க மாதவர் வளவன் செங்கோல் வளமை குன்றாது நிற்க
என்று அலைமோதி ஒலிக்கும் பொன்னியும் (காவிரியாறும்) உறந்தையும் சிறப்புறுவதாகுக.

பாடல்

பூதலம் வாழ்க குந்தர் பொலிவுடன் விளங்க நான்கு
வேதமெந் நாளு மோங்க வேதியர் பசுக்கள் பல்க
மாதவர் வளவன் செங்கோல் வளமை குன்றாது நிற்க
ஓதமே யறையும் பொன்னி யுறந்தையுஞ் சிறக்க மாதோ. 3

பூதலம் வாழ்க குந்தர் பொலிவுடன் விளங்க நான்கு வேதம் எந்நாளும் ஓங்க வேதியர் பசுக்கள் பல்க மாதவர் வளவன் செங்கோல் வளமை குன்றாது நிற்க ஓதமே அறையும் பொன்னி உறந்தையும் சிறக்க மாதோ. 3

ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி எழுபது. 
காலம் 12 ஆம் நூற்றாண்டு.  


No comments:

Post a Comment