Pages

Friday, 22 July 2016

ஈட்டி எழுபது IttiElupatu 4

மக்கள் வளைந்து கவிந்த சிறப்பில்லா கொடுந்தமிழால் கவிதை பாடினர். வளவன் அவற்றையெல்லாம் நீக்கினான். சிலர் முயன்று புதிய கவிதைகளைப் பாடினர். அவை தலைப்பும் முடிவும் இல்லாமல் இருந்தன. அவற்றை வளவன் சாடினான். வளவன் தன் வாளைக் கவிதையாக்கிக்கொண்டு சாடினான். நான் (நாம்) வளவன் மகிழக் கவிதை பாடுகிறேன். அகன்ற நாடும் இதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பாடல்

கோட்கவி கொண்டு மாக்கள் கொடுந்தமிழ் கூறநீத்துத்
தாட்கவி புதிய வாட்டந் தலைக்கடை துரந்து சாட
வாட்கவி கொண்ட மன்னன் வளவனு மகிழ நாமே
நாட்கவி பாடு நாட்போ லிருப்பது பெரிய நாடே. 4

கோள் கவி கொண்டு மாக்கள் கொடுந்தமிழ் கூற நீத்துத் தாள் கவி புதிய ஆட்டம் தலைக் கடை துரந்து சாட வாள் கவி கொண்ட மன்னன் வளவனும் மகிழ நாமே நாள் கவி பாடும் நாள் போல் இருப்பது பெரிய நாடே. 4

ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி எழுபது.
காலம் 12 ஆம் நூற்றாண்டு.  


No comments:

Post a Comment