Pages

Friday, 22 July 2016

ஈட்டி எழுபது IttiElupatu 5

விடங்கம் என்றும், மாகாளம் என்றும் போற்றப்படும் ஏழு ஊர்கள் - விடங்கம் ஏழ் ஆதி  இடங்கொள் மாகாளம் மேழும்
  1. வீதிவிடங்கம் எனப் போற்றப்படும் திருவாரூர் - வீதி விடங்கம் ஆரூர்
  2. திருவெண்காடு - வெண்காடும்
  3. சிவன் நடனமாடும் தில்லை மூதூர் - நடம் கொளும் தில்லை மூதூர்
  4. திரு ஐயாறு - பஞ்ச நன் நதி
  5. சாய்க்காடு - சாய்க்காடும்
  6. திருவிடை மருதூர் - இடைமருதூர்
  7. திருச்செங்காட்டங்குடி - செங்காடும்

என்பன தொடங்கிப் பேசப்படும் ஏழு ஊர்களிலும் தருமம் சிறக்கும்படிச் செய்யும் செங்குந்தர் நலமுடன் வாழ்வார்களாக - தொடங்கிய தரும ஆட்சிச் செங்குந்தர் தொகுதி வாழி. 5

பாடல்

விடங்கமே ழாதி வீதி விடங்கமா ரூர்வெண் காடும்
நடங்கொளுந் தில்லை மூதூர் பஞ்சநன் னதிசாய்க் காடும்
இடங்கொள்மா காளமேழு மிடைமரு தூர்செங் காடும்
தொடங்கிய தரும வாட்சிச் செங்குந்தர் தொகுதிவாழி. 5

விடங்கம் ஏழ் ஆதி வீதி விடங்கம் ஆரூர் வெண்காடும் நடம் கொளும் தில்லை மூதூர் பஞ்ச
நன் நதி சாய்க்காடும் இடங்கொள் மாகாளம் மேழும் இடைமருதூர் செங்காடும் தொடங்கிய தரும ஆட்சிச் செங்குந்தர் தொகுதி வாழி. 5

ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி எழுபது.
காலம் 12 ஆம் நூற்றாண்டு.  


No comments:

Post a Comment