மயங்கிசைக் கொச்சகக்
கலிப்பா
தாழிசை
விட்டகன்ற காதலன் மீண்டுவரும் தூதுரைத்து
விட்டகன வுக்கு விருந்துசெயக் கூடலையே
1211 1
என்கனவில்
என்னோ டிருந்தவர் யானிரப்பத் துஞ்சுவரேல்
என்னுயிர் வாழ்தல் எதற்கென்று சொல்லிடுவேன்
1212 2
என்கனவில்
யானவரைக் காண்பதால் என்னுயிர் வாழ்வதனை
ஏனனவில் நல்காமல் என்னை மறைக்கின்றார்
1213 3
என்கனவில்
காமம் வருமேல் கலைந்தபின் நல்காரை
தாமாகத் தேடித் தழுவும் தகைபெறுமே
1214 4
என்கனவில்
கண்ட பொழுதின்பம் காட்டும் நனவினிலும்
கண்ட பொழுதன்றோ கண்ணின்பம் கொண்டிருக்கும்
1215 5
என்கனவில்
என்றும் இருந்துள் இனிப்பார் நனவென்னும்
ஒன்றில்லை என்றால் உவப்பன்றோ எந்நாளும்
1216 6
என்கனவில்
என்னைக் கசக்குதற்கு என்ன உரிமையுண்டு
பின்நனவில் விட்டுப் பிரிந்திருக்கும் காதலர்க்கே
1217 7
என்கனவில்
தோள்மேல் கிடந்தவர் சும்மா நனவினிலே
வாள்போலே நெஞ்சறுத்து வஞ்சனையேன் செய்கின்றார்
1218 8என்றெல்லாம்
தரவு
தன்கன வின்பம் தறுக்கி மகிழ்ந்தவள்
பின்னவரை எண்ணிப் பெரிதும் கவல்கின்றாள்
தனிச்சொல்
நன்றாமோ
சுரிதகம்
ஊரீர்கேள்
உம்கண்ணில் தென்படாது ஊர்போன காதலர்
எம்கண் கனவில் இருப்ப தறியீரோ 1219
ஊர்கண்ணில் காணா தொதுங்கியென் கண்ணுறங்கும்
நார்கண்ணார் நம்நீத்தார் என்றால் நகைப்பிடமே
1220
ஆர்கண்ணோ நல்ல தறை.
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
122 கனவு நிலை
உரைத்தல்
1211. காதலர்
தூதொடு வந்த கனவினுக்கு யாது செய்வேன்கொல், விருந்து.
1212. கயல்
உண்கண் யான் இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன்மன்.
1213. நனவினான்
நல்காதவரைக் கனவினான் காண்டலின் உண்டு, என் உயிர்.
1214. கனவினான்
உண்டாகும் காமம்-நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
1215. நனவினான்
கண்டதூஉம், ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இனிது.
1216. நனவு
என ஒன்று இல்லைஆயின், கனவினான் காதலர் நீங்கலர்மன்.
1217. நனவினான்
நல்காக் கொடியார் கனவினான், என், எம்மைப் பீழிப்பது.
1218. துஞ்சுங்கால்
தோள் மேலர் ஆகி, விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர், விரைந்து.
1219. நனவினான்
நல்காரை நோவர்-கனவினான் காதலர்க் காணாதவர்.
1220. நனவினான்,
நம் நீத்தார் என்பர்; கனவினான் காணார்கொல், இவ் ஊரவர்.
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment