Pages

Sunday, 12 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 123

123 (மாலைப்) பொழுது கண்டு இரங்கல்
 
ஆயன் குழலோசை மாலைநேரம் வந்ததைச் சொல்லும் தூதாக வரும்
கணவர் உடனில்லாத பெண்ணுக்கு மாலைவேளை துன்பம் தரும்
கலிவெண்பா

விட்டகன்ற காதலர் மீண்டுவரா நாள்களிலே
தொட்டலைக்கும் வேலையெனச் சொல்லிடுவேன் மாலையே 1221

கண்ணுருட்டிக் கொண்டணைத்துக் காட்டாமல் சென்றவர்போல்
கண்ணிருட்டும் காரிருள்நின் காதலனோ மாலையே 1222

நீர்ப்பணியோ அன்றி நினைவுப் பனியரும்போ
ஆர்ப்பனிப்பத் துன்பம் அளக்கின்றாய் மாலையே 1223
பனி = நடுக்கம். பனித் தூறல்
காதலர் இல்லாத போழ்து களப்போரில்
ஏதிலார் போல எனைக்கொல்வாய் மாலையே 1224

காலைப் பொழுதிற்குக் காணிக்கை தந்தேனோ
வாலைப் பகையுண்டோ வஞ்சனையேன் மாலையே 1225

என்னுள்ளார் என்னோ டிருக்கிலுன் நோயறியேன்
பின்னளிப்பார் இன்று பிழியாதே மாலையே 1226

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மயக்க மலராவாய் மாலையே 1227
மால்+ ஐ + மயக்கம் – ஆசையாகிய பெருமை மிக்க மயக்கம்
ஐ பெற்று ஆகும் – தொல்காப்பியம் உரியியல்
ஆயன் குழலோசை யாய்த்தூ தனுப்புகிறாய்
பாயும் நெருப்புப் பழமன்றோ மாலையே 1228

ஊராரைப் பார்த்து மருள்கின்ற உள்ளறிவு
சாராத் தலையும் தவிப்(பு)உன்னில் மாலையே 1229
குறளில் – பதி = ஊர், நினைவுப் பதியம்
மதி = நிலா, அறிவு
பைதல் = மன உளைச்சல்
ஒண்பொருள் தேடி உவக்கின்ற கண்ணாளர்
எண்பொரு ளாகி இருக்கும் உயிராகி
நண்ணி நயந்தூறல் நன்று 1230
குறள் – பொருள் மாலை = பொருள் மேல்
மருள் மாலை = ஒளியிருள் மருட்சி, மன மயக்க மருட்சி


இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

123 பொழுது கண்டு இரங்கல்

1221. மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் \ வேலை நீ; வாழி, பொழுது.
1222. புன்கண்ணை வாழி, மருள் மாலை! எம் கேள்போல் \ வன்கண்ணதோ, நின் துணை.
1223. பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் \ துன்பம் வளர, வரும்.
1224. காதலர் இல் வழி, மாலை, கொலைக்களத்து \ ஏதிலார் போல, வரும்.
1225. காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான் \ மாலைக்குச் செய்த பகை.
1226. மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத \ காலை அறிந்ததிலேன்.
1227. காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, \ மாலை மலரும் இந் நோய்.
1228. அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன் \ குழல்போலும் கொல்லும் படை.
1229. பதி மருண்டு, பைதல் உழக்கும் மதி மருண்டு, \ மாலை படர்தரும் போழ்து.
1230. பொருள் மாலையாளரை உள்ளி, மருள் மாலை \ மாயும், என் மாயா உயிர்.

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment