117 படர் மெலிந்து
இரங்கல்
கொடி
படர்வது போல அவளது நினைவுகள் அவனை நினைத்துப் படருதல்தான் படர்.
மற்றும்
படு – படர் – படுதல் – என்ற வகையில் துன்பப்படுதல் என்றும் கொள்ளலாம்.
எனவே
படர் என்பது நினைவுத் துன்பம்.
நினைவுத்
துன்பத்தால் உடல் மெலிந்து போய்,
மெலிவு
ஊருக்குத் தெரிகிறதே என்று வருந்துதல்
இங்குக்
கூறப்படுகிறது.
![]() |
| புணை | ஓடம் | மிதவை நீர்க்கடலைக் கடக்க இது போன்ற புணை இருக்கிறது காமக் கடலைக் கடக்க அவளைத் தவிர வேறு புணை இல்லையே |
கலிவெண்பா
என்துன்பம் யான்மறைப்பேன் என்றாலும் ஆற்றுமணல்
தன்னுள் இறைக்கும்நீர் தானூறல் போல்மிகுமே
1161
என்நோய் மறைக்க எனக்கே திறனில்லை
முன்நோய்செய் தார்க்கும் முறையிடும் வக்கிலையே
1162
காமமும் நாணும் காவடியின் தொங்கலைப்போல்
தாமிருபால் தொங்குவதால் தாங்க முடியலையே
1163
காமக் கடலுண் டதனைக் கடப்பதற்கு
ஏமப் புணையில்லை என்செய்வேன் சொல்லுங்கள்
1164
வேண்டியவர் மாட்டும் வெறித்துன்பம் செய்திடுவார்
வேண்டாதார் மாட்டென்ன செய்வார் விளங்கலையே
1165
காமத்தில் இன்பம் கடலளவு என்றெண்ணில்
காமம் சுடுங்கால் கடல்கொள்ளாத் துன்பங்காண்
1165
காமமாம் ஆற்றைக் கடந்து கரையேற
ஏமப் பரிசல் இரவாமோ சொல்வீரே 1167
ஊரையெல்லாம் தூங்கவைத்து உற்றதுணை என்றென்னைச்
சோராமல் தூங்காமல் சும்மா இராத்தொளைக்கும்
1168
விட்டகன்றார் துன்பத்தின் மேலான துன்பத்தைக்
கொட்டி அளக்கும் கொடிய இரவதுவே 1169
உள்ளம்போல் சென்றவரை ஒட்டிக்கொண் டால்கண்கள்
வெள்ளநீர் நீந்தாவே வேட்டு 1170
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
117 படர் மெலிந்து
இரங்கல்
1161. மறைப்பேன்மன்
யான், இஃதோ, நோயை இறைப்பவர்க்கு \ ஊற்றுநீர் போல மிகும்.
1162. கரத்தலும்
ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்கு \ உரைத்தலும் நாணுத் தரும்.
1163. காமமும்
நாணும் உயிர் காவாத் தூங்கும், என் \ நோனா உடம்பின் அகத்து.
1164. காமக்
கடல் மன்னும் உண்டே;அது நீந்தும் \ ஏமப் புணை மன்னும் இல்.
1165. துப்பின்
எவன் ஆவர்மன்கொல்-துயர் வரவு \ நட்பினுள் ஆற்றுபவர்.
1166. இன்பம்
கடல் மற்றுக் காமம்; அஃது அடுங்கால், \ துன்பம் அதனின் பெரிது.
1167. காமக்
கடும் புனல் நீந்திக் கரை காணேன், \ யாமத்தும், யானே உளேன்.
1168. மன்
உயிர் எல்லாம் துயிற்றி,-அளித்து, இரா! \ என் அல்லது இல்லை, துணை.
1169. கொடியார்
கொடுமையின் தாம் கொடிய-இந் நாள் \ நெடிய கழியும் இரா.
1170. உள்ளம்
போன்று உள்வழிச் செல்கிற்பின்,வெள்ளநீர் \ நீந்தல மன்னோ, என் கண்.
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment