116 பிரிவு ஆற்றாமை
குடும்பத்தைப்
பொருளீட்டிக் காப்பாற்றும் பொறுப்பை ஆண் மகன் பெற்றிருந்தான்.
எனவே
காக்கும் கடமையை நிறைவேற்ற அவன் பிரிய வேண்டியதாயிற்று.
தண்ணீர்
சுட்டால் ஆற்றிக் கொள்வது போல
ஆணின்
பிரிவைப் பெண் ஆற்றிக்கொள்வதுதான் இயல்பு.
ஆனால்
இன்னும் திரும்பவில்லையே என்று துடிப்பதும் இயல்புதானே.
இதுதான்
பிரிவாற்றாமை.
மயங்கிசைக் கொச்சகக்
கலிப்பா
தரவு
பிரிந்துசெல்வ தில்லையென்றால் பேசிடுக பிரிவுண்டேல்
பிரிந்தபின் உயிரிருக்கும் பெண்ணிடத்துப்
பேசல்மேல் 1151
இன்பொழுகும் பார்வையினால் இவர்கட்டிப் போட்டாலும்
துன்பிருக்கும் பிரிவதிலே சுழன்றிருக்கும்
உடலுறவில் 1152
விட்டகலேன் என்றுரைப்பார் விட்டென்னைப் பிரிந்திடுவார்
அட்டப்பொய் நம்புவதோ அரிதரிதே இவர் உறுதி
1153
அராகம் = முடுகியல்
உடலுற வதிலுயிர் உரசிட இணைகையில் ஒருமுறை
பலமுறை
இடைபிரி யலனென இதனையும் நம்பிய என்குறை என்னசொல்
1154
பேரெண்
காப்பாற்றிக் கொள்வதெனில் காதலன்போய்ப் பிரியாமல்
காப்பாற்றிக் கொள்வதுவே பிரிந்திட்டால் கைவிடலாம்
1155 1
பிரிந்துபோய்ப் பொருள்கொண்டு பின்மீள்வேன்
என்பாரேல்
அரிதன்றோ நப்பாசை அவர்வரவு மெய்யெனலே
1156 2
தாழிசை
பொருள்துறையில் அவரின்று போனதனால் கைவளையல்
அருள்துறையை நாடுவதாய் அகன்றென்னைத் தூற்றிடுமே
1157
1
உறவினர்கள் இல்லாத ஊர்வாழ்தல் துன்பந்தான்
இறைகொண்ட இனியவரின் றில்லாமை பெருந்துன்பம்
1158 2
தொட்டால்தான் சுடும்நெருப்பு காமமெனும் துணைநெருப்போ
விட்டாலே உயிர்சுடுமோர் வேதனையும் வியப்பன்றோ
1159 3
தனிச்சொல்
அதனாலே
சுரிதகம்
மற்றவர் போலப் பிரிந்திருந்து வாழேன்நான்
அற்றாளென் றெண்ணி அளி 1160
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள்
மூலம்
பரிமேலழகர்
குறள் வைப்பு முறை
சொல்
பிரிப்புப் பதிவு
இரண்டு
அடிகள் ஒரே வரியில்
116 பிரிவு ஆற்றாமை
1151. செல்லாமை
உண்டேல், எனக்கு உரை; மற்று நின் \ வல்வரவு, வாழ்வார்க்கு உரை.
1152. இன்கண்
உடைத்து அவர் பார்வல்; பிரிவு அஞ்சும் \ புன்கண் உடைத்தால், புணர்வு.
1153. அரிதுஅரோ,
தேற்றம்-அறிவுடையார்கண்ணும் \ பிரிவு ஓர் இடத்து உண்மையான்.
1154. அளித்து,
‘அஞ்சல்!’ என்றவர் நீப்பின், தெளித்த சொல் \ தேறியார்க்கு உண்டோ, தவறு?.
1155. ஓம்பின்,
அமைந்தார் பிரிவு ஓம்பல்! மற்று அவர் \ நீங்கின், அரிதால், புணர்வு.
1156. பிரிவு
உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிது, ‘அவர் \ நல்குவர்’என்னும் நசை.
1157. துறைவன்
துறந்தமை தூற்றாகொல் முன்கை \ இறை இறவாநின்ற வளை!.
1158. இன்னாது,
இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும் \ இன்னாது, இனியார்ப் பிரிவு.
1159. தொடின்
சுடின் அல்லது, காமநோய் போல, \ விடின் சுடல் ஆற்றுமோ, தீ.
1160. அரிது
ஆற்றி, அல்லல் நோய் நீக்கி, பிரிவு ஆற்றி, \ பின் இருந்து, வாழ்வார் பலர்.
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment