115 அலரறிவு உறுத்தல்
காமம்
வெளிப்படுதலை அலர் என்றும், கௌவை என்றும் கூறுவர்.
மறைவில்
நிகழும் உடலுறவை மற்றவர் அறிய நேர்வதுதான் அது.
அவனோ,
அவளோ தன் ஏக்கத்தையும், சோக்கத்தையும்
ஏதோ
ஒரு வகையில் வெளிப்படுத்துவதால் அது நிகழும்.
பூவின்
மணம் போலச் சிலர் மட்டும் அறியின் அது அலர்.
ஊரெல்லாம்
அறிந்து, ஊர் மக்கள் உள்ளங்களை யெல்லாம் கவ்விக் கொள்வது கௌவை.
வெளிப்படையாகப்
பேசாமல் மறைமுகமாகப் பேசப்படுவது அலர்.
வெளிப்படையாகப்
பலரால் பேசப்படுவது கௌவை.
அலரை
அறிவுறுத்தல் என்றும்,
அலர்
அறிவு உறுத்துகிறது என்றும்
அலரறிவுறுத்தல்
என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.
அறிவுறுத்து
– அறிவுறுத்தல் – இதில் உறு என்பது துணைவினை.
உறுத்து
என்பது முதல்வினை ஆயின் உள்ளத்தைத் துன்புறுத்தல் என்று பொருள்.
பஃறாழிசைக்
கொச்சகக் கலிப்பா
தாழிசைகள்
மூன்று வருவது இயல்பு.
பல
வருவது பஃறாழிசை.
மொழியில்
கொச்சைமொழி உண்டு.
அதுபோலக்
கலிப்பாவில் கொச்சைப் பட்டுக் கிடப்பது கொச்சகக் கலிப்பா
– யாப்பருங்கலம்
நூற்பா 85
தரவு
எங்களது மறையுறவை எங்களது துடிதுடிப்பால்
பொங்கியெழக் கண்டவர்கள் புகல்கின்ற அலராலே
தங்கிடுமால் எங்களுயிர் தழையுமுற வாதலினால்
1141
எங்குண்டோ அந்தமலர் இதோவுண்டே அவள்கண்ணில்
அவளருமை தெரியாமல் அலர்தூற்றும் ஊர்வாயால்
எவருக்கு நன்மையென இவர்களுக்குத் தெரியலையே
1142
தாழிசை
ஊரறிந்த கௌவைச்சொல் உண்மையென மலரட்டும்
சீரறிந்த செம்மைச்சொல் சேர்ப்பிக்கும் எங்களையே
1143 1
பலருரைக்கும் கௌவையினால் பாலிக்கும் காமஅலை
இலையென்றால் காமத்திற் கெங்குண்டோ இன்பநிலை
1144 2
களியாட்டம் தன்னளவில் கண்டவர்க்குக் கள்ளின்பம்
வெளியாட்டக் கௌவையினால் மேவுவதே பேரின்பம்
1145 3
நிலாமுகத்தில் பாம்பைப்போல் நிழலுண்மை ஊரறியும்
நிலைபோலே மறையொருநாள் நிற்கும்அலர் நெடுநாளே
1146 4
அன்னைசொல் நீர்ஊற்ற அறி ஊர்சொல் எருப்போட
தன்னாலே தழைக்கின்ற காமநோய் தகவுடைத்தே
1147 5
நெய்யூற்றி நெருப்பணைக்கும் நெறியைப்போல்
காமத்தைச்
செய்யூற்றுக் கௌவையால் சேர்ந்தணைப்பர் பொல்லாதே
1148 6
தனிச்சொல்
அதனால்,
சுரிதகம்
பிரியேன்நான் அஞ்சாதே என்றார், பிரிந்தார்
வரியும் அலருக்கு மாழ்குவதோ நாணி 1149
எமக்கிந்தச் சொல்வேண்டும் இன்றவர் வந்து
தமக்கின்பம் கொள்க தணித்து 1150
இது திருக்குறள் பாவுரை
அடியேன் செங்கைப் பொதுவன் இயற்றியது 2006
திருக்குறள்
மூலம்
பரிமேலழகர்
குறள் வைப்பு முறை
சொல்
பிரிப்புப் பதிவு
இரண்டு
அடிகள் ஒரே வரியில்
115 அலர் அறிவுறுத்தல்
1141. அலர்
எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப் \ பலர் அறியார், பாக்கியத்தால்.
1142. மலர்
அன்ன கண்ணாள் அருமை அறியாது, \ அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர்.
1143. உறாஅதோ,
ஊர் அறிந்த கௌவை? அதனைப் \ பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
1144. கவ்வையான்
கவ்விது, காமம்; அது இன்றேல், \ தவ்வென்னும், தன்மை இழந்து.
1145. களித்தொறும்
கள் உண்டல் வேட்டற்றால்-காமம் \ வெளிப்படும் தோறும் இனிது.
1146. கண்டது
மன்னும் ஒரு நாள்; அலர் மன்னும் \ திங்களைப் பாம்பு கொண்டற்று.
1147. ஊரவர்
கௌவை எருவாக,அன்னை சொல் \ நீராக, நீளும்-இந் நோய்.
1148. 'நெய்யால்
எரி நுதுப்பேம்' என்றற்றால் 'கௌவையால் \ காமம் நுதுப்பேம்' எனல்.
1149. அலர்
நாண ஒல்வதோ 'அஞ்சல் ஓம்பு!' என்றார் \ பலர் நாண நீத்தக் கடை?.
1150. தாம்
வேண்டின் நல்குவர், காதலர்; யாம் வேண்டும் \ கௌவை எடுக்கும், இவ் ஊர்.
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment