பாவுரை
111 புணர்ச்சி மகிழ்தல்
அவளைநான் கண்டேன் அவள்வாய்ச்சொல் கேட்டேன்
அவள்தேனை உண்டேன் அவன்மணத்தை மோந்தேன்
அவள்மேனி தோய்ந்தேன் அருமையடா ஐந்தும்
1101
அவள்தந்த உள்நோய்க் கவளே மருந்தாம் 1102
இருக்கிறதா வானுலகம் என்னே இவளணைப்பில்
தூங்குதற்கு மேலே சுகம்தருமோ 1103 விந்தையடா
நீங்கில் சுடுதல் நெருங்கில் குளுகுளுப்பாய்ப்
பற்றும் பதத்தீயைப் பாவையிவள் வாங்கியது
1104
எற்றே இவளின்பம் எண்ணம்போ லே இனிக்கும்
1105
தொட்டால் உயிர்தழைக்கும் தோன்றா அமிழ்தமிவள்
1106
தொட்டுழைத்த சோறுபோல் சொல்லடங்கா இன்பவுடல்
1107
கட்டிஅணைக்கையிலே காற்றிடையில் வேண்டாமே
1108
விட்டு விலகல் விருப்பம் உணர்ந்தணைத்தல்
சேர்ந்தவர்கள் வாழ்வில் செழித்து விளைகாமம்
1109
கூர்ந்தறிவார் நோக்கினிலே கொள்ளைகொள்ளை யாய்
அறிவு
மீந்திருக்கு மாபோலே வேண்டும் இவளணைப்பில்
மேய்ந்திருக்கும் இன்பம் மிகுந்து 1110
திருக்குறள் பாவுரை - அடியேன்
செங்கைப் பொதுவன் இயற்றியது 2006
திருக்குறள் மூலம் | சொல் பிரிப்புப் பதிவு
| இரண்டு அடிகள் ஒரே வரியில்
111 புணர்ச்சி மகிழ்தல்
1.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும் \ ஒண்டொடிகண்ணே உள. 1101
2.
பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை \ தன்நோய்க்குத் தானே மருந்து. 1102.
3.
தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல் \ தாமரைக்கண்ணான் உலகு?. 1103.
4.
நீங்கின் தெறூஉம், குறுகுங்கால் தண்ணென்னும், \ தீ யாண்டுப் பெற்றாள், இவள்?. 1104.
5.
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே \ தோட்டார் கதுப்பினாள் தோள். 1105.
6.
உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு \ அமிழ்தின் இயன்றன, தோள். 1106.
7.
தம் இல் இருந்து, தமது பாத்து உண்டற்றால் \ அம் மா அரிவை முயக்கு. 1107.
8.
வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை \ போழப் படாஅ முயக்கு. 1108.
9.
ஊடல், உணர்தல், புணர்தல் இவை-காமம் \ கூடியார் பெற்ற பயன். 1109.
10.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் \ செறிதோறும் சேயிழைமாட்டு. 1110
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment