![]() |
| தண்மாரி Tropical cyclone |
தன் பொருளை வழிப்பறி செய்த ஊரைப் புலவர்
காளமேகம் சபிக்கிறார்.
வழிப்பறி செய்யும் கோளர் இருக்கும் ஊர்.
பிடுங்கிக்கொள்ளும் திருட்டுத் தொழிலைக் கற்ற ஊர். காளைகளாய் ஆண்கள் நின்று கதறும்
ஊர். இந்த ஊர் நாளை முதல் விண் பொழியும் மாரி அற்று வெளுத்துப் போகட்டும். வானம்
கறுத்து மண்மழை பொழியட்டும். (மண்மாரி = சூறாவளி, Tropical
cyclone)
பாடல்
கோளரிருக்கு மூர்கோள் கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் –நாளையே
விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான் .(137)
கோளர் இருக்கும் ஊர் கோள் கரவு கற்ற ஊர் காளைகளாய் நின்று கதறுமூர் நாளையே விண்மாரி அற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி பெய்க இந்த வான்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment