Pages

Friday, 3 June 2016

அன்னம் | காளமேகப்புலவர் KalamekapPulavar 135

சிவபெருமான் 
சிவபெருமான் செய்த கொலைகளை அடுக்கிச் சிவன்மீது பாய்கிறார்.
சிவன் ஆரூரில் வாழ்பவன். அன்னம் வயலில் சூழ்ந்திருக்கும் ஊர் திருவாரூர். அவனுக்கு இன்னுமா வைர நெஞ்சம் இருக்கவேண்டும்? பிள்ளைக்கறி கேட்டுச் சிறுத்தொண்டன் மகனைக் கொன்றான். மகனைத் தேர்க்காலில் ஏற்றிக் கொல்லும் நிலைமையை மனுநீதிச் சோழனுக்குத் தந்தான். சண்டன் என்பவன் தன் மகனைக் கொல்லும்படிச் செய்தான். இவையெல்லாம் போதாதா. என்னையும் பட்டினியால் சாகவைக்கிறானே!

பாடல்
அன்னவயல் சூழ்ந்திருக்கு மாரூரா னெஞ்சத்தில்
இன்னமக வை மிருப்பதாமுன்னமொரு
தொண்டன்மகனைக் கொன்றுஞ் சோழன்மகனைக் கொன்றுஞ்
சண்டன்மகனைக் கொன்றுந் தான் –(135)

அன்னம் வயல் சூழ்ந்திருக்கும் ஆரூரான் நெஞ்சத்தில் இன்னம் அக வைரம் இருப்பதா முன்னம் ஒரு தொண்டன் மகனைக் கொன்றும் சோழன் மகனைக் கொன்றும் சண்டன் மகனைக் கொன்றுந்தான்

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment