![]() |
| வாலி மடிந்த போர் |
வாலியைக் கொன்றான்.
இலங்கை அரக்கர்களைக் கொன்றறான்.
முடிமன்னர் பலரைக் கொன்றான்.
துரியோதனன் முதலான 100 பேர், கன்னன் ஆகிய 101
பேரைக் கொன்றான்.
சத விகரம் = தஞ்சம் அடைந்தவருக்கும் வஞ்சம்
செய்தல்.
கண்ணன் பெற்ற வாழ்வெல்லாம் வஞ்சனையால் வந்த
வாழ்வு.
வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவுங்
கோலமுடி மன்னர் குறைந்ததுவுஞ் சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவு மையோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு .(136)
வாலி மடிந்ததுவும் வல் அரக்கர் பட்டதுவும் கோல முடிமன்னர் குறைந்ததுவும் சால மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவும் ஐயோ சத விகரத்தால் வந்த தாழ்வு .
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:
Post a Comment