Pages

Wednesday, 1 June 2016

கன்னபுரம் | காளமேகப்புலவர் KalamekapPulavar 133

கண்ணபுரம் சவுரிராசப் பெருமாள் 
திருக்கண்ணபுரம் கோயிலில் குடிகொண்டிருக்கும் திருமாலே! நான் சொல்வது ஒன்றைக் கேள். எல்லாக் கடவுள்களிலும் நீ பெரியவன். உன்னைக் காட்டிலும் நான் பெரியவன். எப்படி? உனக்கு பத்தே பத்து பிறப்புதான். சிவனுக்கோ ஒன்றுகூட இல்லை. எனக்கோ எண்ணமுடியாத பிறப்பு. அதனால் நான் பெரியவன். எதுகை நோக்கிக் ‘கண்ணபுரம்’ > ‘கன்னபுரம்’ ஆயிற்று.

பாடல்

கன்னபுர மாலே கடவுளிலு நீயதிகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள்முன்னமே
உன்பிறப்போ பத்தாம்முயர் சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப் பெண்ணத் தொலையாதே (133)

கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம், உன்னிலுமே யான் அதிகம் ஒன்றுகேள், முன்னமே உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமில்லை, என் பிறப்பு எண்ணத் தொலையாதே

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


2 comments:

  1. கவி காளமேகத்தின் இப்பாடல் ஒரு அருமையான,

    ஒருவிகற்ப நேரிசை வெண்பா

    கன்னபுர மாலே கடவுளிலு நீயதிகம்
    உன்னிலுமே யானதிக மொன்றுகேள் –முன்னமே
    உன்பிறப்போ பத்தாம் முயர்சிவனுக் கொன்றுமில்லை
    என்பிறப்பெண் ணத்தொலையா தே!

    ReplyDelete