![]() |
| சேனைக் கிழங்கு |
அமராபதியான் என்னும்
குருக்கள் வீட்டில் விருந்து உண்டு வந்தேன். ஆனையும், குதிரையும் தன் மேல்
ஏற்றிக்கொண்டு வந்து தந்த மன்னைக்கிழங்கைக் கொன்ற கறி, சேனைக் கிழங்கு, மன்னைக்
கிழங்கு, அரைக்காய் நிலையில் முற்றாமல் இருக்கும் ஈ-அவரைப்-பூ, ஆகியவற்றை
நெய்யுடன் கூட்டிச் சமைத்து விருந்து படைத்தான் அந்தக் குருக்கள். அதனை நான்
உண்டுவந்தேன்.
பாடல்
ஆனை குதிரைதரு மன்னைதனைக் கொன்றகறி
சேனைமன் னரைக்காய்துன் றீயவரை – பூநெயுடன்
கூட்டியமு திட்டான் குருக்களம ராபதியான்
வீட்டிலுண்டு வந்தேன் வருந்து .(134)
ஆனை குதிரை தரும் மன்னைதனைக் கொன்ற கறி சேனை மன் அரைக்காய் துன்று ஈ அவரை பூ நெயுடன் கூட்டி அமுது இட்டான் குருக்கள் அமராபதியான் வீட்டில் உண்டு வந்தேன் வருந்து .
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment