பாண்டியன் | வழுதி
![]() |
| உழுத்தஞ்செய் |உழுந்து | உளுந்து வயல் |
உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து
ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை
அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக்
கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா?
வெண்பா 114
உழுத
உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை
செவிஅரிந்து அற்றால் – வழுதியைக்
கண்டநம்
கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன
மன்னோ பசப்பு. 114
உழுத
உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள்
இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும்
வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

No comments:
Post a Comment