பாண்டியன் | தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல்
கொண்டு ஒழுகும் கோ
![]() |
| பண்டைய தமிழகத்தின் ஐந்து பிரிவுகள் சேரர், சோழர், பாண்டியர், தொண்டையர், கொங்கர் |
தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது.
அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை
மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன்.
என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த
கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன்.
என்ன செய்வது? அவன்தான் என் கோமகன்.
5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர்
வெண்பா 115
நறுவேந்து
கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன்
வஞ்சியான் அல்லன் – துறையின்
விலங்காமை
நின்று வியன்தமிழ்நா டைந்தின்
குலங்காவல்
கொண்டொழுகும் கோ. - 115
நறு
வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று
வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும்
வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

No comments:
Post a Comment