பாண்டியன் | மாறன்
![]() |
| மாலை அணிந்திருக்கும் முருகன் |
மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன்.
மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம்
சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக்
காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப்
பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா?
ஒன்றும் தெரியவில்லையே!
வெண்பா 113
சென்றதுகொல்
போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும்
நின்றதுகொல்
நேர்மருங்கில் கையூன்றி – முன்றில்
முழங்கும்
கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு)
உழந்துபின்
சென்றவென் நெஞ்சு. 113
சென்றதுகொல்
போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில்
முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு.
முத்தொள்ளாயிரம் – மூவேந்தரைப் போற்றும்
வெண்பாக்கள் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

No comments:
Post a Comment