திருவாரூரில் உள்ள சிவபெருமானைத் திருமால் என்று
வைத்து, திருமாலின் செயல்களை ஆரூரான் மேல் வைத்துப் பாடியது, இந்தப் பாடல்.
- சிவனாக, உலகமெல்லாம் படியளக்கும். | திருமாலாக, வாமன உருவில் மூன்று உலகங்களையும் மூன்று அடியால் அளக்கும்.
- சிவனாக, பரவையாரின் ஊடலைத் தீர்க்க, சுந்தரமூர்த்திக்காக, தூது செல்லும். | திருமாலாக, துரியோதனனிடம் தூது செல்லும்.
- சிவன், மால், இருவருமே பாம்பின் மேல் ஏறி ஆடுவர்.
- சிவன், மால், இருவருமே சிறப்புக்குரிய சனி (கலி) பகவானின் சாபத்தைத் தீர்த்துவைப்பர்.
- சிவன், மால், இருவருமே சண்டையிடும்போது தேர்ச்சக்கரத்தை உதைப்பர்.
பெண்ணே! கழுத்தில் நஞ்சு வைத்திருக்கும் திருவாரூர்
சிவனது திருவடி இப்படிச் செய்யும்.
![]() |
திருமால் கண்ணன் பாம்பின்மேல் ஆடல் |
![]() |
சிவன் பாம்பின் மேல் ஆடல் |
பாடல்
பாரளக்குந் தூதுசெல்லும் பையரவின் மேனடிக்கும்
சீரகலி சாபத்தைத் தீர்க்குமே .- ஊருலகில்
சண்டச் சகடுதைக்குந் தையலாய் கார்நீல
கண்டத்தா ரூரான் கழல்.(130)
பார் அளக்கும் தூது செல்லும் பை அரவின் மேல் நடிக்கும் சீர கலி சாபத்தைத் தீர்க்குமே ஊர் உலகில் சண்டச் சகடு உதைக்கும் தையலாய் கார் நீலகண்டத்து ஆரூரான் கழல்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.
No comments:
Post a Comment