Pages

Monday, 18 April 2016

நற்றிணை Natrinai 101

புன்னையங் கொழுநிழல்


இதற்கு முன் அது இன்பம். – தோழியிடம் சொல்கிறான்.

முற்றாத பச்சை-மஞ்சளின் புறத்தே தன் சுற்றம் சூழ அமைந்திருப்பது போன்று, உப்பங்கழியில் மேய்ந்த இறா மீனின் காய்ந்த குவியலைப் புன்னை மர நிழலுக்குக் கொண்டுவந்து பரப்புவார்கள்.

முன்பெல்லாம் அந்தத் துறை எனக்கு இனிமையாக இருந்தது.

இப்போது அதில் இனிமை இல்லை. 
அந்தத் துறை இரக்கப்படத் தக்கதாக உள்ளது.

அகன்ற அல்குல், மெல்லிதாகிய இடை ஆகியவற்றைக் கொண்ட இவள், 
வலை வீசி மீன் பிடிக்கும் பரதவர் மக்களின் மகள். 

இவள் என்னை மான் போல் மருண்டு பார்க்கிறாள்.

இப்போதெல்லாம் நான் அவளது தயக்கத்தைப் (துனி) போக்கி இன்பம் காண்கிறேன்.

இதற்கு முன் அது இன்பம்.

 
(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 101 நெய்தல்
வெள்ளியந் தின்னனார் பாடல்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் 
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் 
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி 
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் 
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி 
இனிதுமன் அளிதோ தானே துனி தீர்ந்து 
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் 
மீன் எறி பரதவர் மட மகள் 
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

பச்சை மஞ்சள்


பச்சை மஞ்சள் போல் இறா 

No comments:

Post a Comment