புண்ணியம் பாவம்
புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல். (1)
மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி![]() |
| புண்ணியம் பாவம் |

No comments:
Post a Comment