Pages

Thursday, 10 December 2015

நல்வழி 2 Nalvali 2

சாதி இரண்டு - இட்டார் - இடாதோர் - பட்டாங்கு

பாடல்

சாதி யிரண்டொழிய வேறில்லைசாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. (2)

பட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி.
சாதிகள்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி 


No comments:

Post a Comment