Pages

Friday, 11 December 2015

நல்வழி 3 Nalvali 3


இடும்பை - பொய் -  மெய் - ஊழ் - வீடு

பாடல்

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. (3)

இந்த உடம்பே துன்பத்துக்கெல்லாம் பெரும் துன்பமாக இருக்கிறது அல்லவா?. இது பொய்யான உடம்புதானே. இதனை மெய் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா? கூடாது. ஊழ்தான் இதனை இட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்லூழ் இருந்தால் இது நன்றாக இருக்கும். இதற்கு ஊழே பெரிய வலிமை. நோய் இந்த உடம்பிற்கு இடும்பை. இதனை விளங்கிக்கொண்டு வாழ்வதுதான் வீடுபேறு. இந்த வீடுபேற்றினைப் பெற்று வாழ்பவர்களை உலகம் கொண்டாடும்.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ உடம்பிடைத் துச்சில் இருந்த உயிர்க்கு
திருக்குறள் 
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி

No comments:

Post a Comment