புண்ணியம் - மாங்காய் - மாத்திரைக் கோல்
பாடல்
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய்யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு. (4)
எண்ணி ஒரு செயலை யாராலும் செய்துமுடிக்க இயலாது. செய்துமுடிக்கும் செயலெல்லாம் அவன் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது. கண் தெரியாத ஒருவன் தன் கையிலிருந்த தடியை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும். அது அவனுக்கு ஆகும் காலம்.
ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை, கைப்பொருள் போகு ஊழால் தோன்றும் மடி - திருக்குறள்
![]() |
| கண் பார்வை இல்லாதவன் கையில் இருப்பது மாத்திரைக்கோல் |
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி

No comments:
Post a Comment