வருந்தி - நெஞ்சம் புண்ணாக - மாந்தர் தொழில்
வருந்தி அழைத்தாலும் வாராதவாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். (5)
வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்குச் சேரவேண்டியவை அல்லாதன நமக்கு வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டுக்கொண்டிருந்து சாவதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.
அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம்
அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம்என்று நெடுந்தாரம் நினைத்து தினைத்துச் சாவதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.
![]() |
| நெடுந்தாரம் நினைத்தல் |
அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம்என்று நெடுந்தாரம் நினைத்து தினைத்துச் சாவதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி

No comments:
Post a Comment