பால் - தேன் - பாகு - பருப்பு - சங்கத்தமிழ் மூன்று
![]() |
| ஆணைமுகன் | பிள்ளையார் |
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி
பாடல் கடவுள் வாழ்த்து
பாலுந் தெளிதேனும் பாகும்பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
நான் அழகுக்கோலம் செய்து வைத்திருக்கும் யானைமுகக் கடவுளே! நான் உனக்குப் பால், தேன், பாயாசம், பருப்பு ஆகிய நான்கு பொருளகளையும் கலந்து தருகிறேன். அதற்கு ஈடாக நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் சங்கத்தமிழ் நூல்கள் மூன்றை மட்டும் தந்தால் போதும்.

No comments:
Post a Comment