பாடியவர் ஔவையார்
பாலுந் தெளிதேனும் பாகும்
பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
(கடவுள் வாழ்த்து)
புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்
தோர்சொல்லுந்
சாதி யிரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர்
இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற்
பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. (3)
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய்
யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
வருந்தி அழைத்தாலும் வாராத
வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
உள்ள தொழிய ஒருவர்க்
கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி
னாலென்
எல்லாப் படியாலும் எண்ணினால்
இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த
வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர்
கேண்மின்
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்
நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்
ஆனாலும்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
ஒருநாள் உணவை ஒழியென்றால்
ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர்
என்வயிறே
ஆற்றங் கரையின் மரமும்
அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
ஆவாரை யாரே அழிப்பர்
அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே
விலக்குவார்
பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை
பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம்
அழியாது
சிவாய நமவென்று சிந்தித்
திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத
வெல்லாம்
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர்
குணங்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை
நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்
இடாரே
சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின்
கொடுமையால்
அம்மி துணையாக ஆறிழிந்த
ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
நீரு நிழலு நிலம்பொதியும்
நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப்
பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
ஆன முதலில் அதிகஞ்
செலவானான்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
மானங் குலங்கல்வி வண்மை
அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல்
பத்தும்
ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்
டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும்
நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். (27)
உண்பது நாழி உடுப்பது
நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின்
கலம்போலச்
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது
அளிப்பரேல்
தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
ஆறிடும் மேடும் மடுவும்போல்
ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
கல்லானே யானாலுங் கைப்பொருளொன்
றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
பூவாதே காய்க்கும் மரமுமுள
மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங்
காலம்அயல்
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார்
யாக்கைக்குப்
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார்
தங்கள்
தேவர் குறளும் திருநான்
மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர்
சொல்லும்
நல்வழி மூலமும் உரையும்முற்றிற்று

No comments:
Post a Comment