கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வ
னடியிணை
என்று மேத்தித் தொழுவோ
மியாமே.
![]() |
| கொன்றை மலர் | கொன்றை வேந்தன் |
அ - வரிசை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 1
ஆலயம் தொழுவது சாலவு
நன்று 2
இல்லற மல்லது நல்லற
மன்று 3
ஈயார் தேட்டைத் தீயார்
கொள்வர் 4
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்
கழகு 5
ஊருடன் பகைக்கின் வேருடன்
கெடும் 6
எண்ணு மெழுத்தும் கண்ணெனத்
தகும் 7
ஏவா மக்கண் மூவா
மருந்து 8
ஐயம் புகினுஞ் செய்வன
செய் 9
ஒருவனைப் பற்றி யோரகத்
திரு 10
ஓதலி னன்றே வேதியர்க்
கொழுக்கம் 11
ஒளவியம் பேசுத லாக்கத்திற்
கழிவு 12
(ஃ)அஃகமுங்
காசுஞ் சிக்கெனத் தேடு 13
க - வரிசை
கற்பெனப் படுவது சொற்றிறம்
பாமை 14
காவ றானே பாவையர்க்
கழகு 15
கிட்டா தாயின் வெட்டென
மற 16
கீழோ ராயினுந் தாழ
வுரை 17
குற்றம் பார்க்கிற் சுற்ற
மில்லை 18
கூரம் பாயினும் வீரியம்
பேசேல் 19
கெடுவது செய்யின் விடுவது
கருமம் 20
கேட்டி லுறுதி கூட்டு
முடைமை 21
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி 22
கொற்றவ னறித லுற்றிடத்
துதவி 23
கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு 24
கௌவை சொல்லி னெவ்வருக்கும்
பகை 25
ச - வரிசை
சந்ததிக் கழகு வந்திசெய்
யாமை 26
சான்றோ ரென்கை யீன்றோட்
கழகு 27
சிவத்தைப் பேணிற் றவத்திற்
கழகு 28
சீரைத் தேடி னேரைத்
தேடு 29
சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் 30
சூதும் வாதும் வேதனை
செய்யும் 31
செய்தவ மறந்தாற் கைதவ
மாளும் 32
சேமம் புகினும் யாமத்
துறங்கு 33
சையொத் திருந்தா லைய
மிட்டுண் 34
சொக்க ரென்பவ ரத்தம்
பெறுவர் 35
சோம்ப ரென்பவர் தேம்பித்
திரிவர் 36
த - வரிசை
தந்தைசொன் மிக்க மந்திர மில்லை 37
தாயிற் சிறந்தொரு கோயிலு
மில்லை 38
திரைகட லோடியுந் திரவியந்
தேடு 39
தீராக் கோபம் போரா
முடியும் 40
துடியாப் பெண்டிர் மடியி
னெருப்பு 41
தூற்றும் பெண்டிர் கூற்றெனத்
தகும் 42
தெய்வஞ் சீறிற் கைதவ
மாளும். 43
தேடா தழிக்கிற் பாடா
முடியும் 44
தையும் மாசியும் வையகத்
துறங்கு 45
தொழுதூண் சுவையி னுழுதூ
ணினிது 46
தோழ னோடு மேழைமை
பேசேல் 47
ந - வரிசை
நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் 48
நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை 49
நிற்கக் கற்றல் சொற்றிறம்
பாமை 50
நீரகம் பொருந்திய வூரகத்
திரு 51
நுண்ணிய கருமமு மெண்ணித்
துணி 52
நூன்முறை தெரிந்து சீலத்
தொழுகு 53
நெஞ்சை யொளித்தொரு வஞ்சக
மில்லை 54
நேரா நோன்பு சீரா
காது 55
நைபவ ரெனினு நொய்ய
வுரையேல் 56
நொய்யவ ரென்பவர் வெய்யவ
ராவர் 57
நோன்பென் பதுவே கொன்று
தின்னாமை 58
ப - வரிசை
பண்ணிய பயிரிற் புண்ணியம்
தெரியும் 59
பாலோ டாயினுங் கால
மறிந்துண் 60
பிறன்மனை புகாமை யறமெனத்
தகும் 61
பீரம் பேணி பாரந்
தாங்கும் 62
புலையுங் கொலையும் களவுந்
தவிர் 63
பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் 64
பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் 65
பேதைமை யென்பது மாதர்க்
கணிகலம் 66
பையச் சென்றால் வையந்
தாங்கும் 67
பொல்லாங் கென்பவை யெல்லாந்
தவிர் 68
போனக மென்பது தானுழந்
துண்டல் 69
ம - வரிசை
மருந்தே யாயினும் விருந்தோ
டுண் 70
மாரி யல்லது காரிய
மில்லை 71
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு
மழை 72
மீகாம னில்லா மரக்கல
மோடாது 73
முற்பகல் செய்யிற் பிற்பகல்
விளையும் 74
மூத்தோர் சொன்ன வார்த்தை
யமிர்தம் 75
மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு 76
மேழிச் செல்வம் கோழை
படாது 77
மைவிழி யார்தம் மனையகன்
றொழுகு 78
மொழிவது மறுக்கி னழிவது
கருமம் 79
மோன மென்பது ஞான
வரம்பு 80
வ - வரிசை
வளவ னாயினு மளவறிந்
தழித்துண் 81
வானஞ் சுருங்கிற் றானஞ்
சுருங்கும் 82
விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் 83
வீரன் கேண்மை கூரம்
பாகும் 84
(வு)உரவோ ரென்கை யிரவா
திருத்தல் 85
(வூ)ஊக்க முடைமை யாக்கத்திற்
கழகு 86
வெள்ளைக் கில்லை கள்ளச்
சிந்தை 87
வேந்தன் சீறி னாந்துணை
யில்லை 88
வையந் தோறுந் தெய்வந்
தொழு 89
(வொ)ஒத்த விடத்து நித்திரை
கொள் 90
(வோ)ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் 91
கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று

No comments:
Post a Comment