எந்த எழுத்துக்கு எது முதல் எழுத்து
ஔவையார் பாடிய கொன்றைவேந்தன் பாடல்
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வனடியிணை
என்று மேத்தித் தொழுவோமியாமே.
![]() |
| கொன்றை மலர் | கொன்றை சூடிய வேந்தன் |
அ - வரிசை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 1
ஆலயம் தொழுவது சாலவுநன்று 2
இல்லற மல்லது நல்லறமன்று 3
ஈயார் தேட்டைத் தீயார்கொள்வர் 4
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு 5
ஊருடன் பகைக்கின் வேருடன்கெடும் 6
எண்ணு மெழுத்தும் கண்ணெனத்தகும் 7
ஏவா மக்கண் மூவாமருந்து 8
ஐயம் புகினுஞ் செய்வனசெய் 9
ஒருவனைப் பற்றி யோரகத்திரு 10
ஓதலி னன்றே வேதியர்க்கொழுக்கம் 11
ஒளவியம் பேசுத லாக்கத்திற்கழிவு 12
(ஃ)அஃகமுங்காசுஞ் சிக்கெனத் தேடு 13
க - வரிசை
கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை 14
காவ றானே பாவையர்க்கழகு 15
கிட்டா தாயின் வெட்டெனமற 16
கீழோ ராயினுந் தாழவுரை 17
குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை 18
கூரம் பாயினும் வீரியம்பேசேல் 19
கெடுவது செய்யின் விடுவதுகருமம் 20
கேட்டி லுறுதி கூட்டுமுடைமை 21
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி 22
கொற்றவ னறித லுற்றிடத்துதவி 23
கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு 24
கௌவை சொல்லி னெவ்வருக்கும்பகை 25
ச - வரிசை
சந்ததிக் கழகு வந்திசெய்யாமை 26
சான்றோ ரென்கை யீன்றோட்கழகு 27
சிவத்தைப் பேணிற் றவத்திற்கழகு 28
சீரைத் தேடி னேரைத்தேடு 29
சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் 30
சூதும் வாதும் வேதனைசெய்யும் 31
செய்தவ மறந்தாற் கைதவமாளும் 32
சேமம் புகினும் யாமத்துறங்கு 33
சையொத் திருந்தா லையமிட்டுண் 34
சொக்க ரென்பவ ரத்தம்பெறுவர் 35
சோம்ப ரென்பவர் தேம்பித்திரிவர் 36
த - வரிசை
தந்தைசொன் மிக்க மந்திர மில்லை 37
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை 38
திரைகட லோடியுந் திரவியந்தேடு 39
தீராக் கோபம் போராமுடியும் 40
துடியாப் பெண்டிர் மடியினெருப்பு 41
தூற்றும் பெண்டிர் கூற்றெனத்தகும் 42
தெய்வஞ் சீறிற் கைதவமாளும். 43
தேடா தழிக்கிற் பாடாமுடியும் 44
தையும் மாசியும் வையகத்துறங்கு 45
தொழுதூண் சுவையி னுழுதூணினிது 46
தோழ னோடு மேழைமைபேசேல் 47
ந - வரிசை
நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் 48
நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை 49
நிற்கக் கற்றல் சொற்றிறம்பாமை 50
நீரகம் பொருந்திய வூரகத்திரு 51
நுண்ணிய கருமமு மெண்ணித்துணி 52
நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு 53
நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை 54
நேரா நோன்பு சீராகாது 55
நைபவ ரெனினு நொய்யவுரையேல் 56
நொய்யவ ரென்பவர் வெய்யவராவர் 57
நோன்பென் பதுவே கொன்றுதின்னாமை 58
ப - வரிசை
பண்ணிய பயிரிற் புண்ணியம்தெரியும் 59
பாலோ டாயினுங் காலமறிந்துண் 60
பிறன்மனை புகாமை யறமெனத்தகும் 61
பீரம் பேணி பாரந்தாங்கும் 62
புலையுங் கொலையும் களவுந்தவிர் 63
பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் 64
பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் 65
பேதைமை யென்பது மாதர்க்கணிகலம் 66
பையச் சென்றால் வையந்தாங்கும் 67
பொல்லாங் கென்பவை யெல்லாந்தவிர் 68
போனக மென்பது தானுழந்துண்டல் 69
ம - வரிசை
மருந்தே யாயினும் விருந்தோடுண் 70
மாரி யல்லது காரியமில்லை 71
மின்னுக் கெல்லாம் பின்னுக்குமழை 72
மீகாம னில்லா மரக்கலமோடாது 73
முற்பகல் செய்யிற் பிற்பகல்விளையும் 74
மூத்தோர் சொன்ன வார்த்தையமிர்தம் 75
மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு 76
மேழிச் செல்வம் கோழைபடாது 77
மைவிழி யார்தம் மனையகன்றொழுகு 78
மொழிவது மறுக்கி னழிவதுகருமம் 79
மோன மென்பது ஞானவரம்பு 80
வ - வரிசை
வளவ னாயினு மளவறிந்தழித்துண் 81
வானஞ் சுருங்கிற் றானஞ்சுருங்கும் 82
விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் 83
வீரன் கேண்மை கூரம்பாகும் 84
(வு)உரவோ ரென்கை யிரவாதிருத்தல் 85
(வூ)ஊக்க முடைமை யாக்கத்திற்கழகு 86
வெள்ளைக் கில்லை கள்ளச்சிந்தை 87
வேந்தன் சீறி னாந்துணையில்லை 88
வையந் தோறுந் தெய்வந்தொழு 89
(வொ)ஒத்த விடத்து நித்திரைகொள் 90
(வோ)ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் 91
கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று

I am not able to find the meaning though it is mentioned in the end.
ReplyDeleteYou can find the meaning by searching separate line of poem.
Delete