Pages

Friday, 11 December 2015

மூதுரை 8 Mudurai 8

நல்லார்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றேஅவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று. (8)
  • நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது.
  • நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது.
  • நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது.
  • நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது.
    Goodman | நல்லார் 
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)


No comments:

Post a Comment