ஆம்பல்
நீரளவே யாகுமாம் நீராம்பல்தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம். (7)
நீரில் பூத்திருக்கும் ஆம்பல் பூ நீர்மட்டத்திலேயே இருக்கும். (நீர் உயர்ந்தால் உயரும். நீர் தாழ்ந்தால் தாழும்.)
- அதுபோல ஒருவரது அறிவு அவர் கற்ற நூலினது அளவாக இருக்கும்.
- அதுபோல முந்தைய பிறவியில் எந்த அளவு நற்பணி செய்து தவப்பயன் பெற்றிருக்கிறார்களோ அந்த அளவு இந்தப் பிறவியில் செல்வத்தின் அளவு இருக்கும்.
- குணம் பெற்றெடுத்த தாய் தந்தையரைப் பொருத்தே இருக்கும்.

ஆம்பல் இலை நீர்மட்டத்தில் மிதக்கும்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)
No comments:
Post a Comment