கல்-தூண்
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். (6)
கல்லால் ஆன தூணின் மேல் அது தாங்கமுடியாத அளவு பெரிய பாரத்தை ஏற்றினால் கற்றூணானது பிளந்து நொறுங்கிப் போகுமே அல்லாமல் வளைந்து கொடுக்காது. அரசனுக்காக உயிரையே தரும் பண்புள்ளவர்கள் அரசனின் பகைவரை எதிர்கொள்ளும்போது பணிந்துபோவார்களா? கற்றூண் போன்றவர்கள் அல்லவா?
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)

No comments:
Post a Comment