அழகலா தனசெயேல் 28
அழகலாதன செய்யேல் 28
அழகு அலாதன செய்யேல் 28
அழகு அல்லாதன செய்யேல் 28
ஔவையார்
உடல் அழகு கவர்ச்சியைத்தான் தரும்.
நடத்தை அழகுதான் நலம் தரும் அழகு.
நடத்தை அழகுதான் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று.
நடத்தையில் பிறருக்கு அழகு தோன்றாத செயல்களை நாம் செய்யக்கூடாது.
- உறுப்பழகு பிறவியில் வந்தது. இதனை நாம் மாற்றவேண்டியதில்லை. மாற்றிக் கவர்ச்சி உண்டாக்குதல் காம இன்பத்துக்கே பயன்படும். ஒருவகை உறுப்பழகு சிலருக்குப் பிடிக்கலாம், அதே உறுப்பழகு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால் பிறருக்குப் பயனில்லை. ஒப்பனையால் அழகுபடுத்திக்கொள்வதும் அப்படித்தான்.
- நன்னடத்தையால் பிறரைக் கவரவேண்டும்.
- பிறரைக் கவருமாறு நடந்துகொள்.

No comments:
Post a Comment