Pages

Sunday 6 December 2015

அகநானூறு Agananuru 47

கைவண் செழியன் சிறுமலை மூங்கில் அன்ன தோள்


நெஞ்சே! கவலைப்படாதே. பொருள் தேடும் வினை முடிந்ததும் ஊர் திரும்பிவிடலாம். செழியன் நாட்டுச் சிறுமலை மூங்கில் போன்ற தோளை உடைய உன்னவள் தோளில் முயங்கலாம் என்று தலைவன் தன் நெஞ்சுக்கு ஆறுதல் கூறுகிறான்.
1
நெஞ்சே! எழுச்சியோடு செயல்படு. ஊக்கம் அழியக்கூடாது. தொடர்ந்து சிறப்புற்று முனையவேண்டும். பொருள் ஈட்டும் வினை முடிந்த அப்பொழுதே விரைந்து உன்னவளிடம் மீளலாம்.
2
கடுங்காற்று வீசி, ஆடும் மூங்கிலில் ஒலி எழுப்பும். பின் உரசி எரி பற்றிக்கொள்ளும். அதன் தீ, கொடி விட்டு எரியும். அப்போது மூங்கில் வெடிக்கும். மலைக் குகைகளில் பதுங்கியிருக்கும் கலைமான்  கூட்டம் அஞ்சி ஓடும். இப்படி உயிரினம் போராடும் பாலைநில வழி இது. இதன் வழியாகச் செல்கிறோம்.
3
மலையில் பொழுது மறையும் நேரம். வீட்டில் விளக்கேற்றுவதற்காக மகளிர் திரி திரிப்பர். அதனைப் பார்க்கும் ஆண்புறா தன் புறாவைக் குரல் கொடுத்து அழைக்கும். என்னவளுக்குத் தனிமை தரும் மாலைப்பொழுது அது. அவள் என்னை நினைப்பாள். “எங்கு இருக்கிறாரோ” என்று முணுமுணுத்துக்கொண்டு கலங்குவாள். (கலிழ்வாள்).அவளிடம் செல்வோம்.
4
செழியன் கொடை வழங்கும் கைவளம் கொண்டவன். அணிகலன்களால் அழகு படுத்திய தேரில் வருபவன். அவன் நாட்டில் உள்ளது சிறுமலை. அது மழைமேகம் விளையாடும் மலை. கூதளம்பூ மணம் கமழும் மலை அது. அதில் திரண்டிருக்கும் மூங்கில் போன்ற தோள் அவளுக்கு. அது அசதிப் பெருமூச்சு விட்டு விம்மிக்கொண்டிருக்கும். அது நீங்கும்படி நாம் தழுவலாம். – இப்படித் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். 


பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
2
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி 5
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
3
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,    10
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
4
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்     15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.  

தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது.
ஆலம்பேரி சாத்தனார் பாடியது
This is a monologue to his mind by the hero. He is on the way in a distant place from home for earning. He prevents his ponderings on his lover alone at home.
You, my mind, don’t be worry. Alert in you Endeavour. As soon as the aim reached we shall return home to enjoy with our lover.
Think. We are passing through the dry forest. Here is storm. It makes the bamboos touch together to make sound. At that time the fire catches up. It also makes fire-blasts with sparks that fall in caves which make the resting deer ran away. Such a dangerous way, we are passing.     
It is evening. The sun sets. Ladies at home prepare cotton thread to light lamp. On seeing this male-dove calls its female to shelter. At this time our lover will be thinking us where we are, with tears in her eyes.
King Seliyan is a philanthropist. Mount Sirumali is in his country. Flower Kutalam spreads fragrant all over the mount. The mount is famous for its bamboo. She has her shoulder as this famous bamboo. Let us enjoy her shoulder hugging only after our earning aim is fulfilled. 

A poem by: Sattanar of Alamberi village   
The text is belongs to second century B.C. or earlier.  

விளக்கு ஏற்றுதல்

சிறுமலை

No comments:

Post a Comment