![]()  | 
| திருமணம் | 
அன்னையே! 
- நீ இவளை தினைப்புனம் காவலுக்கு அனுப்பிவைத்தாயே! அதுவும் குற்றம் இல்லை.
 - வளையல் வரிசையை உடைய இவளும் பண்புள்ளவள்.
 - என் குற்றமும் எனக்குத் தெரியவில்லை.
 - எண்ணிப் பார்த்தால் அவனும் தீய செயல் புரியவில்லை.
 - மேலும் அவன் மலையிலிருந்து விழும் அருவிகூடப் பொன்னைக் கொட்டும் அளவுக்கு அவன் செல்வவளம் மிக்கவன்.
 
எனவே திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்கிறாள்
தோழி.
குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு 
தனிப் பாடல்
நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்; 
என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று 
அருவி கொழிக்கும் அணி மலை நாடன்          
தெரியுங்கால், தீயது இலன்.        1
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக் 
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்

No comments:
Post a Comment