Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 38

மலைப்பாம்பு | பாந்தள்

  • அவனுக்கு நேரக்கூடிய மேலும் பல இடர்ப்பாடுகளை எண்ணி இவள் கலங்குகிறாள்.
  • வழிப்பறி செய்வோர் பதுங்கும் இடம், வழுக்கு நிலம், கால் போன போக்கில் சென்று வழியின்றி முட்டிக்கொள்ளும் இடங்கள், பேய், மலைப்பாம்பு, போன்றவை உளப்படப் பிறவற்றால் நேரும் வழித்துன்பங்களும் மலை பிளந்திருக்கும் பாதையில் உண்டாயிற்றே என்று கலங்குகிறாள். 
  • எனவே இவளை அவனுக்கு ஊரறிய திருமணம் செய்துவைத்துச் சேர்த்துவைக்க வேண்டும் - என்று தாயரிடம் தோழி அறத்தொடு நிற்கிறாள்.

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

நூழிலும், இழுக்கும், ஊழ் அடி முட்டமும்,  
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,          
வழுவின் வழாஅ விழுமம், அவர்          260
குழு மலை விடரகம், உடையவால் எனவே.'            

குறிஞ்சிப்பாட்டு முற்றும்

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment