Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 37

கராம் = முதலை

  • இவள் கலங்குவதெல்லால் அவன் வரும் வழியில் இடர்ப்பாடுகள் உள்ளனவே என்பதுதான்.
  • குகையில் பதுங்கும் புலி, சிங்கம், கரடி, முட்டித் தள்ளும் கொம்புகளையுடைய காட்டாட்டுக் கடா, எதிர்த்துப் போரிடும் ஆண்யானை போன்றவற்றைத் தாக்கி அழிக்கும் வெஞ்சினம் அவனுக்கு இருந்தது.
  • என்றாலும் இடி, பேய், இரை தேடும் மலைப்பாம்பு ஆகியவற்றிற்கு அவன் என் செய்வான்?
  • நீர்க்குழிகள், நீர்ச்சுழிகள், அவற்றில் இரைதேடும் முதலை, இடங்கர், கராம் முதலான முதலையினத்துக்கு அவன் என்ன செய்வான்? – என்று கலங்குகிறாள்.

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

அளைச் செறி உழுவையும், ஆளியும், உளியமும்,              
புழற் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,             
வலியின் தப்பும் வன்கண் வெஞ் சினத்து      
உருமும், சூரும், இரை தேர் அரவமும்,             255
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ் சுழி வழங்கும்      
கொடுந் தாள் முதலையும், இடங்கரும் கராமும்,  

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment