அவன் அழவில்லை இவள் அழுகிறாள்
அவன் இளமை மாறாதவன்,
வளமை குறையாதவன்,
தன் தகைமையிலிருந்து நழுவாதவன்,
சும்மாக் கிடக்கும் ஊரில் இப்படி மாய நிகழ்வுகள்
நடக்கத்தான் செய்யும் என்பதனை நன்கு உணர்ந்தவன்.
இந்நிகழ்வுகளை வெறுக்காமல் இவளைப் போற்றுவான்.
மலரை அடிக்கும் மழைநீர் போன்றவை அவை என்று
எண்ணிக்கொள்வான்.
அவன் அப்படி, இவள் எப்படி?
இவளது கண்ணில் ஈரம்,
பெருகிய மதமதப்பு.
அது மழையாக மாறியது.
இவள் மார்பகத்தில் அரிக்கும் பனியாகிப் பொழிந்தது.
வலையில் பட்ட மயில்போல் மேனியழகு குன்றி வதங்குகிறாள்.
நினைக்கும் போதெல்லாம் திரும்மத் திரும்ப
அழுகிறாள்.
He didn’t tear, but
she does.
He is young and rich
and worries less in character.
He will take the disasters
as rain dashing the flowers.
In total he is a
gentle man.
But, what is her position?
She is crying as a peacock
caught in net.
குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு
இளமையின் இகந்தன்றும் இலனே; வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர் 245
மாய வரவின் இயல்பு நினைஇ, தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா
ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்;
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்,
வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய், 250
நினைத்தொறும் கலுழுமால், இவளே கங்குல்,
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்
No comments:
Post a Comment