![]() |
நாய் குரைத்தல் |
- தடைகள் நேர்ந்து இவள் இன்பம் கிடைக்காவிட்டால் சலிப்பில் சினம் கோள்ளமாட்டான்
- ஊர்க்காவலர் விரைந்து வரினும், புதியவனாகிய இவனைக் கண்டு சினந்து நாய் குரைப்பினும், அன்னையாகிய நீ துயில் எழுந்துவிடாலும், நடமாடுபவர் தெளிவாகத் தெரியும்படி நிலாவெளிச்சம் காய்ந்தாலும் அவன் இவளை அடைவதற்குத் தடையாக இருக்கும். இவளோடு இன்பத் துயில் கொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போகும். அப்போதெல்லாம் அதற்காக அவன் சினம் கொள்ளமாட்டான்.
When he comes some disturbance may
appear. Night-gourd roaming, dog barking at stranger, clear moonlight and you,
the mother of the lady awakes – are some of the obstacles to him to get her. If
it happens, he will not worry or become anger. He will come on the next day. It
is his character.
குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், 240
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்,
பெறாஅன்; பெயரினும், முனியல் உறாஅன்,
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்
No comments:
Post a Comment