Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 31

ஆனிரை மாலையில் இல்லம் திரும்பல்

அங்கே அப்போது மாலைக்காலம்

  • பொழுது போனபின் இரவும் பகலும் மால்-மயங்கம் கொள்ளும் மாலைக்காலம் வந்தது.
  • மான்கூட்டம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அசைபோட்டது.
  • பசுக்கள் கன்றுகளுக்காகக் கனைத்துக்கொண்டே மன்று திரும்பின.
  • அன்றில்கள் பெண்ணைமரத்தில் இருந்துகொண்டு அகவின. அக்குரல் கொம்பூதுவது போல் இருந்தது.
  • பாம்புகள் வெளிச்சத்துக்காக மணியைக் ககக்கின. (நம்பிக்கை)
  • கோவலர் ஆம்பல்கொடியில் செய்த புல்லாங்குழலை ஊதிக்கொண்டும், இடையிடையே தம் ஆனிரைகளைத் தெளிவாகப் பெயர்சொல்லி விளித்து அவற்றை விரைந்து செல்லுமாறு தூண்டிப் பயிற்றுவித்துக் கொண்டும் சென்றனர்.
  • ஆம்பல் பூவின் போது விரியத் தொடங்கியது.
  • வளமனைகளில் வாழும் மகளிர் விளக்கேற்றித் தூண்டி விடலாயினர்.
  • அந்தணர்கள் அந்தி வேளையைத் தொழும் விழாவினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
It is evening.
Deer are chewing under trees.
Cows are coming home.
Antril-birds are blowing raising horn sound.
Cow-herd men are fluting.
The cow-herd men call each of their cows with a separate name they christened for which they respond.
Women are putting light in lamps.
Brahmans lit evening ceremonial fire. 

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

மான் கணம் மரமுதல் தெவிட்ட, ஆன் கணம்           
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,             
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்   
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ,    220
பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர்       
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப்              
பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,     
அந்தி அந்தணர் அயர, கானவர் 225

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment